தமிழ்நாடு வருவாய் வட்டங்கள்
தமிழ்நாட்டில் தற்போது உள்ள 38 மாவட்டங்களில் 317 வருவாய் வட்டங்கள் உள்ளது. அவைகளின் மாவட்ட வாரியான பட்டியல்[1] :
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பொன்னேரி, திருவள்ளூர் என 3 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 48 உள்வட்டங்களும் மற்றும் 792 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2]
சென்னை மாவட்டம்
சென்னை மாவட்டம், அம்பத்தூர், கிண்டி, தண்டையார்பேட்டை என 3 வருவாய் கோட்டங்களும், 16 வருவாய் வட்டங்களும், 40 உள்வட்டங்களும் மற்றும் 68 வருவாய் கிராமங்களும் கொண்டது.[3] தற்போது சென்னை மாவட்டத்தின் பரப்பளவு 178 சகிமீ ஆகவுள்ளது. இதனை 426 சகிமீ ஆக உயர்த்த, வருவாய் வட்டங்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.[4] [5]மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியும் கொண்டது.
- தண்டையார்பேட்டை வட்டம்
- அமைந்தக்கரை வட்டம்
- அயனாவரம் வட்டம்
- கொளத்தூர் வட்டம்
- எழும்பூர் வட்டம்
- கிண்டி வட்டம்
- மாம்பலம் வட்டம்
- மயிலாப்பூர் வட்டம்
- பெரம்பூர் வட்டம்
- புரசைவாக்கம் வட்டம்
- வேளச்சேரி வட்டம்
- மதுரவாயல் வட்டம்
- திருவொற்றியூர் வட்டம்
- சோழிங்கநல்லூர் வட்டம்
- ஆலந்தூர் வட்டம்
- மாதவரம் வட்டம்
- அம்பத்தூர் வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மற்றும் திருப்பெரும்புதூர் என 2 வருவாய் கோட்டங்களும், 5 வருவாய் வட்டங்களும் கொண்டது.
செங்கல்பட்டு மாவட்டம்
நவம்பர் 2019இல், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு நிறுவப்பட்டது.[7]செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு, தாம்பரம், மதுராந்தகம் என 3 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும், 40 குறு வட்டங்களும், 636 வருவாய் கிராமங்களும் கொண்டது.[8]
வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டம், வேலூர், குடியாத்தம் என 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும் கொண்டது. இம்மாவட்டப் பகுதிகளைக் கொண்டு நவம்பர் 2019-இல் இராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் நிறுவப்பட்டது.
- வேலூர் வட்டம்
- குடியாத்தம் வட்டம்
- கீழ்வைத்தியனான் குப்பம் வட்டம் (கே. வி. குப்பம் வட்டம்)
- காட்பாடி வட்டம்
- பேரணாம்பட்டு வட்டம்
- அணைக்கட்டு வட்டம்
இராணிப்பேட்டை மாவட்டம்
வேலூர் மாவட்டத்தின், பகுதிகளைக் கொண்டு நவம்பர் 2019 இல் நிறுவப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை, அரக்கோணம் என 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 18 குறுவட்டங்களும், 330 வருவாய் கிராமங்களும் கொண்டது.[9]
திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி என 2 வருவாய் கோட்டங்களும், 4 வருவாய் வட்டங்களும் கொண்டது.[10]
திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை, ஆரணி மற்றும் செய்யார் என 3 வருவாய் கோட்டங்களும், 12 வருவாய் வட்டங்களும், 54 உள்வட்டங்களும், 1064 வருவாய் கிராமங்களும் கொண்டது.[11]
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மற்றும் திண்டிவனம் முகையூர் என 3 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 57 உள்வட்டங்களும் கொண்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் என 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும் கொண்டது.[12][13]
கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம், கடலூர், விருத்தாச்சலம் மற்றும் சிதம்பரம் என 3 வருவாய் கோட்டங்களும், 10 வருவாய் வட்டங்களும் மற்றும் 905 வருவாய் கிராமங்களும் கொண்டது.[14]
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் என 2 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும், 29 உள்வட்டங்களும் மற்றும் 661 வருவாய் கிராமங்களும் கொண்டது.[15]
தருமபுரி மாவட்டம்
தருமபுரி மாவட்டம், தருமபுரி மற்றும் அரூர் என 2 வருவாய் கோட்டங்களும், 7 வருவாய் வட்டங்களும், 23 உள்வட்டங்களும் மற்றும் 470 வருவாய் கிராமங்களும் கொண்டது. [16]
சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டம், சேலம், ஆத்தூர், மேட்டூர் மற்றும் சங்ககிரி என 4 வருவாய் கோட்டங்களும், 13 வருவாய் வட்டங்களும், 44 உள்வட்டங்களும் மற்றும் 665 வருவாய் கிராமங்களும் கொண்டது.[17]
பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் என்ற ஒரு வருவாய் கோட்டமும், 4 வருவாய் வட்டங்களும், 11 உள்வட்டங்களும் மற்றும் 152 வருவாய் கிராமங்களும் கொண்டது. [18]
அரியலூர் மாவட்டம்
அரியலூர் மாவட்டம், அரியலூர் மற்றும் உடையார்பாளையம் என 2 வருவாய் கோட்டங்களும், 4 வருவாய் வட்டங்களும், 15 உள்வட்டங்களும் மற்றும் 195 வருவாய் கிராமங்களும் கொண்டது.[19]
நாகப்பட்டினம் மாவட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
ஈரோடு மாவட்டம்
ஈரோடு மாவட்டம், ஈரோடு மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் என 2 வருவாய் கோட்டங்களும், 10 வருவாய் வட்டங்களும், 35 உள்வட்டங்களும் மற்றும் 375 வருவாய் கிராமங்களும் கொண்டது.[20]
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு என 2 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் மற்றும் 391 வருவாய் கிராமங்களும் கொண்டது.[21]
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், லால்குடி, முசிறி என 4 வருவாய் கோட்டங்களும், 11 வருவாய் வட்டங்களும் மற்றும் 506 வருவாய் கிராமங்களும் கொண்டது.[23]
தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை என 3 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 50 உள்வட்டங்களும் மற்றும் 906 வருவாய் கிராமங்களும் கொண்டது.[24][25]
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் மற்றும் மன்னார்குடி என 2 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும், 28 உள்வட்டங்களும் மற்றும் 573 வருவாய் கிராமங்களும் கொண்டது.[26]
நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூர் & கூடலூர் என 3 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 15 உள்வட்டங்களும் மற்றும் 88 வருவாய் கிராமங்களும் கொண்டது. [27]
கோயம்புத்தூர் மாவட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர் வடக்கு மற்றும் பொள்ளாட்சி என 3 வருவாய் கோட்டங்களும், 11 வருவாய் வட்டங்களும், 38 உள்வட்டங்களும் மற்றும் 295 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது. [28]
திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம், திருப்பூர், உடுமலைப்பேட்டை மற்றும் தாராபுரம் என 3 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 33 உள்வட்டங்களும் மற்றும் 350 வருவாய் கிராமங்களும் கொண்டது. [29]
கரூர் மாவட்டம்
கரூர் மாவட்டம், கரூர் மற்றும் குளித்தலை என 2 வருவாய் கோட்டங்களும், 7 வருவாய் வட்டங்களும், 20 உள்வட்டங்களும் மற்றும் 203 வருவாய் கிராமங்களும் கொண்டது. [30]
புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் என 3 வருவாய் கோட்டங்களும், 12 வருவாய் வட்டங்களும், 45 உள்வட்டங்களும் மற்றும் 763 வருவாய் கிராமங்களும் கொண்டது. [31]
தேனி மாவட்டம்
தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் என 2 வருவாய் கோட்டங்களும், 5 வருவாய் வட்டங்களும், 17 உள்வட்டங்களும் மற்றும் 113 வருவாய் கிராமங்களும் கொண்டது. [32]
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல், பழனி மற்றும் கொடைக்கானல் என 3 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும் மற்றும் 361 வருவாய் கிராமங்களும் கொண்டது.[33]
மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டம், மதுரை, மேலூர், உசிலம்பட்டி என 3 வருவாய் கோட்டங்களும், 11 வருவாய் வட்டங்களும், 57 உள்வட்டங்களும் மற்றும் 665 வருவாய் கிராமங்களும் கொண்டது.[34]
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்டம், 2 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 39 உள்வட்டங்களும் மற்றும் 529 வருவாய் கிராமங்களும் கொண்டது.[35]
இராமநாதபுரம் மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம், பரமக்குடி என 2 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 38 உள்வட்டங்களும் மற்றும் 400 வருவாய் கிராமங்களும் கொண்டது.[36]
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம், 3 வருவாய் கோட்டங்களும், 10 வருவாய் வட்டங்களும், 39 உள்வட்டங்களும் மற்றும் 600 வருவாய் கிராமங்களும் கொண்டது.
திருநெல்வேலி மாவட்டம்
இம்மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளைக் கொண்டு புதிய தென்காசி மாவட்டம் நவம்பர் 2019 இல் நிறுவப்பட்டது. இம்மாவட்டம் திருநெல்வேலி மற்றும் சேரன்மாதேவி என 2 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் கொண்டது.[37]
தென்காசி மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து நவம்பர் 2019-இல் நிறுவப்பட்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், தென்காசி என 2 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களையும் கொண்டது.[38][39]
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி என 3 வருவாய் கோட்டங்களும், 10 வருவாய் வட்டங்களும் மற்றும் 480 வருவாய் கிராமங்களும் கொண்டது.
கன்னியாகுமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மற்றும் பத்மநாபபுரம் என 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும் மற்றும் 188 வருவாய் கிராமங்களும் கொண்டது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Taluks of Tamilnadu
- ↑ Thiruvallur District Revenue Administration
- ↑ Taluks of Chennai District
- ↑ Chennai district likely to expand to 426sqkm mid-July 2018
- ↑ Chennai district doubles in size
- ↑ தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
- ↑ தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு
- ↑ செங்கல்பட்டு மாவட்டம் - வருவாய் நிர்வாகம்
- ↑ RANIPET DISTRICT Revenue Administration
- ↑ திருப்பத்தூர் மாவட்டம்-வருவாய் நிர்வாகம்
- ↑ Revenue District
- ↑ KALLAKURICHI DISTRICT Revenue Administration
- ↑ புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
- ↑ Cuddalore District Revenue Administration
- ↑ Krishnagiri District Revenue Administration
- ↑ Dharmapuri District Revenue Administration
- ↑ Salem District Revenue Administration
- ↑ Perambalur District Revenue Administration
- ↑ Ariyalur District Revenue Administration
- ↑ Erode District Revenue Administration
- ↑ [ https://namakkal.nic.in/revenue-administration/ Namakkal District Revenue Administration]
- ↑ தமிழக அரசு செய்தி வெளியீடு எண்:551 - நாள் 16.08.2018
- ↑ Tiruchirappalli District Revenue Administration
- ↑ Tanjore District Revenue Administration
- ↑ https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2018/06/2018062826.pdf
- ↑ Tiruvarur District Revenue Administration
- ↑ N ilgiris District Revenue Administration
- ↑ Coimbatore District Revenue Administration
- ↑ Tirupupur District Revenue Administration
- ↑ Karur District Revenue Administration
- ↑ Pudukkottai District Revenue Administration
- ↑ Theni District Revenue Administration
- ↑ Dindigul District Revenue Administration
- ↑ "Madurai District Revenue Administration". Archived from the original on 2019-04-12. பார்க்கப்பட்ட நாள் 2018-08-31.
- ↑ Sivaganga District Revenue Administration
- ↑ Ramanathapuram District Revenue Administration
- ↑ தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
- ↑ Tenkashi District-Local Bodies Administration
- ↑ புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு