சங்ககிரி
சங்ககிரி | |||||||
— நகராட்சி — | |||||||
அமைவிடம் | 11°28′28″N 77°52′09″E / 11.474500°N 77.869100°ECoordinates: 11°28′28″N 77°52′09″E / 11.474500°N 77.869100°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | சேலம் | ||||||
வட்டம் | சங்ககிரி | ||||||
ஆளுநர் | [1] | ||||||
முதலமைச்சர் | [2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3] | ||||||
சட்டமன்றத் தொகுதி | சங்ககிரி
- | ||||||
சட்டமன்ற உறுப்பினர் |
எஸ். சுந்தரராஜன் (அதிமுக) | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
29,467 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
19.2 சதுர கிலோமீட்டர்கள் (7.4 sq mi) • 330 மீட்டர்கள் (1,080 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/sanka |
சங்ககிரி (Sangagiri) என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டத்தில் உள்ள நகராட்சியாகும். மேலும் இவ்வூர் சங்ககிரி வட்டம் மற்றும் சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இவ்வூரின் மலை சங்கு போல உள்ளதால், இதனை சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சங்ககிரி மலையில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையை சங்ககிரி மலையில் தூக்கிலிடப்பட்டார். இந்த மலையை திப்பு சுல்தான் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு மலையானது சங்கு போன்ற அமைப்பில் அமைந்துள்ளதால் இதற்கு சங்குகிரி என்ற பெயர் பெற்று நாளடையில் அது மருவி சங்ககிரி என்ற பெயர் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் முக்கிய தொழில்களாக லாரி பட்டறைகள், விசைத்தறிகள் மற்றும் விவசாயம் நடைபெற்று வருகிறது.