வனவாசி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
—  பேரூராட்சி  —
வனவாசி
இருப்பிடம்: வனவாசி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°45′09″N 77°52′44″E / 11.752404°N 77.878770°E / 11.752404; 77.878770Coordinates: 11°45′09″N 77°52′44″E / 11.752404°N 77.878770°E / 11.752404; 77.878770
மாவட்டம் சேலம்
வட்டம் மேட்டூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 7,130 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/vanavasi

வனவாசி (Vanavasi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

வனவாசி பேரூராட்சி, சேலத்திலிருந்து 38 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 15 கிமீ தொலைவில் உள்ள மேட்டூரில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

5.21 சகிமீ பரப்பும், 12 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 12 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,890 குடும்பங்களும், 7,130 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78.09% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 970 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் Coordinates: Missing latitude
Invalid arguments have been passed to the {{#coordinates:}} function ஆகும்.

பள்ளி மற்றும் நூலகம்

வனவாசியில் ஓர் அரசு ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மற்றும் அரசு மேனிலைப் பள்ளியும் உள்ளன. மேலும் ஒரு அரசு கிளை நூலகமும் வனவாசியில் செயல்பட்டு வருகின்றது. இந்த நூலகம் ஒப்பற்ற பல நூல்களின் மூலம் மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுகிறது. அது தவிர, அரசு சார்ந்த தனியார் ஆங்கில வழிக் கல்வி பயில்விக்கும் இரண்டு பள்ளிகள் உள்ளன.

கோயில்கள் மற்றும் திருவிழாக்கள்

வனவாசியில் நிறைய திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை மாரியம்மன் கோயில், முத்துகுமாரசாமி கோயில், திரௌபதியம்மன் கோயில், சுப்ரமணியசாமி கோயில், ஓம்காளியம்மன் கோயில், சௌடேஸ்வரி அம்மன் கோயில், முனியப்பன் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன.இங்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கன்னட தேவாங்க செட்டியார் இனத்தால் கொண்டாடப்படும் ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் பண்டிகை மிகவும் புகழ் பெற்றதாகும். ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் மாரியம்மன் பண்டிகையும் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.வனவாசியில் ஒரு மலை உள்ளது.அதன் உச்சியில் கொப்பு கொன்றாயப் பெருமாள் கோயில் உள்ளது.புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு வெகு விமரிசையாக வழிபாடு நடைபெறும்.

மருத்துவமனை

வனவாசியில் ஓர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.இப்போது அருகில் உள்ள பெரிய வனவாசிக்கு மாறியுள்ளது

வங்கி

வனவாசியில் ஒரு ஐசிஐசிஐ வங்கி உள்ளது.மேலும் சிட்டி யூனியன் வங்கி சார்பில் வனவாசி மேல்ரோட்டில் ஒரு ஏடிஎம் மையமும் தொடங்கப்பட்டுள்ளது.

அருகிலுள்ள ஊர்கள்

வனவாசியில் இருந்து பின்வரும் ஊர்கள் கீழ் குறிப்பிட்ட தொலைவுகளில் அமைந்துள்ளன:

சேலம்-36 கிமீ,மேட்டூர் அணை-20 கிமீ,எடப்பாடி-20கிமீ,ஜலகண்டபுரம்-8 கிமீ,தாரமங்கலம்-12 கிமீ,நங்கவள்ளி-2 கிமீ.இந்த ஊர்களுக்கு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து வசதி உள்ளது.மேலும் சிற்றுந்துகளும் உள்ளன.

பொழுதுபோக்குகள்

நெசவுத் தொழிலே வனவாசியில் பெரும்பான்மை மக்கள் மேற்கொள்ளும் முதன்மை தொழிலாக விளங்குகின்றது.மேலும் மாதந்தோறும் அமாவாசை தினம் விடுமுறை நாளாக பின்பற்றப்படுகிறது. அன்றைக்கு மக்கள் யாரும் நெசவுமேற்கொள்ளமாட்டார்கள்வேலைகளுக்கு விடுப்பு எடுத்து கொள்வர்.பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபடுவர்.அன்று அனைவரும் அவர்களின் குடும்பத்தோடும், நண்பர்களுடன் கோவிலுக்கு செல்லுதல், விளையாடுதல், பொழுது போக்கு இடங்களுக்கு செல்லுதல் போன்ற செயல்களில் தத்தம் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர் .மேலும் இங்கு பல கோவில்கள் உள்ளன, வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

படங்கள்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. வனவாசி பேரூராட்சியின் இணையதளம்
  5. Vanavasi Population Census 2011
"https://tamilar.wiki/index.php?title=வனவாசி&oldid=125530" இருந்து மீள்விக்கப்பட்டது