மாநகராட்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மாநகராட்சி (municipal corporation) ஒரு மாநகரம் அல்லது பெருநகர் பகுதியினை உள்ளாட்சி அமைப்பாகும். இந்தியாவில் பத்து இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள் மாநகராட்சி தகுதி பெறுகின்றன. இவற்றிற்கு மாநில அல்லது மாகாண அரசுகள் தனியான சட்டங்கள் மூலம் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கின்றன.

இத்தகைய பெயரிடல் ஐக்கிய இராச்சியத்தில் தோன்றினாலும், இலண்டன் மாநகராட்சியைத் தவிர்த்து, அங்கு பரவலாக பயன்படுத்தப்படுவதில்லை. இருப்பினும் முந்தைய பிரித்தானிய காலனிகளிலும் இந்தியாவிலும் இந்தக் கருத்து கொள்கையளவில் மாநகர உள்ளாட்சி நிர்வாகத்தின் மையமாக உள்ளது.[1][2][3]

இந்தியா

திருச்சி மாநகராட்சிக் கட்டிடம்

இந்தியாவில் இரண்டு இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள் மாநில அரசுகளால் ஆய்வு செய்யப்பட்டு தனி சட்டம் மூலம் மாநகராட்சி நிலை பெறுகின்றன. இதன்மூலம் இந்த மாநகராட்சிகள் நேரடியாக மாநில அரசுடன் தொடர்பு கொள்கின்றன. இந்தியாவின் மிகப்பெரும் மாநகராட்சியாக மும்பை விளங்குகிறது. அடுத்த நிலைகளில் முறையே தில்லி, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை[4] ஆகியன உள்ளன.

Chennai Corporation headquarters

மாநகரம் பல வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநகராட்சி அங்கத்தினர்கள் தங்களுக்குள் மேயர் மற்றும் துணை மேயரை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். மாநகராட்சியின் நிர்வாகப் பொறுப்புகளை மேலாண்மை செய்ய இந்திய ஆட்சிப் பணியை சேர்ந்த மாநகராட்சி ஆணையர் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார். இவர் மாநகராட்சி ஊழியர்களை மேற்பார்வையிடுவதுடன் மாநகராட்சி எடுக்கும் முடிவுகளை செயலாற்றும் பொறுப்பை உடையவராகிறார். ஆண்டின் நிதிநிலை அறிக்கையையும் தயாரிக்கிறார்.

ஓர் நகரின் மாநகராட்சி சாலைகள் பராமரிப்பு, பொதுப் போக்குவரத்து, குடிநீர் வழங்கல், பிறப்பு/இறப்பு பதிவு, கழிவுகள் அகற்றல் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளது. மேலும் சில மாநகராட்சிகள் பொதுமக்கள் பாதுகாப்பிற்கான தீயணைப்பு மற்றும் முதலுதவி வண்டி சேவைகளை வழங்குகின்றன.பூங்காக்கள் மற்றும் கட்டிடங்களையும் பராமரிக்கின்றன. இவற்றிற்கான நிதி வருவாய் சொத்து வரி, மனமகிழ்வு வரி, ஆக்ட்ராய் என்னும் நுழைவு வரி (பல மாநகராட்சிகளில் கைவிடப்பட்டு வருகிறது) மூலமும் பயன்படுத்தும் சேவைகளுக்கான கட்டணங்கள் மூலமும் பெறப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Voorn, Bart; Van Genugten, Marieke L.; van Thiel, Sandra (2017). "The efficiency and effectiveness of municipally owned corporations: A systematic review". Local Government Studies 43 (5): 820–841. doi:10.1080/03003930.2017.1319360. https://repository.ubn.ru.nl/bitstream/2066/176125/1/176125.pdf. 
  2. Tavares, Antonio F.; Camoes, Pedro J. (2007). "Local service delivery choices in Portugal: A political transaction costs network". Local Government Studies 33 (4): 535–553. doi:10.1080/03003930701417544. 
  3. Grossi, G.; Reichard, C. (2008). "Municipal corporatization in Germany and Italy". Public Management Review 10 (5): 597–617. doi:10.1080/14719030802264275. 
  4. "The first corporation". தி இந்து (Chennai). 2003-04-02 இம் மூலத்தில் இருந்து 2004-01-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040128034716/http://www.hindu.com/thehindu/mp/2003/04/02/stories/2003040200100300.htm. 
"https://tamilar.wiki/index.php?title=மாநகராட்சி&oldid=64229" இருந்து மீள்விக்கப்பட்டது