அகத்தீஸ்வரம் வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அகத்தீஸ்வரம் வட்டம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக அகத்தீஸ்வரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 43 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1]

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

வருவாய் கிராமங்கள்

இந்த வட்டத்துக்கு உட்பட்ட சில வருவாய் கிராமங்கள்:

மக்கள்தொகை பரம்பல்

278.24 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அகத்தீஸ்வரம் வட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 5,52,175 ஆகும். சராசரி எழுத்தறிவு 83.47% ஆகவும்; பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1027 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,985 மக்கள் வாழ்கின்றனர். இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5.53% மற்றும் 0.17% ஆகவுள்ளனர்.[2]

அரசியல்

இந்த வட்டத்துக்கு உட்பட்ட சில ஊர்கள் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியிலும், சில ஊர்கள் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியிலும் உள்ளன. இந்த வட்டம் முழுவதும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் உள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. கன்னியாகுமரி மாவட்ட வருவாய் நிர்வாகம்
  2. Agastheeswaram Taluka Population
  3. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-26.
"https://tamilar.wiki/index.php?title=அகத்தீஸ்வரம்_வட்டம்&oldid=127630" இருந்து மீள்விக்கப்பட்டது