கன்னியாகுமரி (பேரூராட்சி)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கன்னியாகுமரி
—  சிறப்பு நிலை பேரூராட்சி  —
கன்னியாகுமரி
இருப்பிடம்: கன்னியாகுமரி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°05′18″N 77°32′19″E / 8.088300°N 77.538500°E / 8.088300; 77.538500Coordinates: 8°05′18″N 77°32′19″E / 8.088300°N 77.538500°E / 8.088300; 77.538500
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் அகத்தீஸ்வரம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி கன்னியாகுமரி
மக்களவை உறுப்பினர்

விஜய் வசந்த்

சட்டமன்றத் தொகுதி கன்னியாகுமரி

-

சட்டமன்ற உறுப்பினர்

என். தாளவாய் சுந்தரம் (அதிமுக)

மக்கள் தொகை 22,453 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


60 மீட்டர்கள் (200 அடி)

குறியீடுகள்


விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரி (Audio file "Ta-கன்னியாகுமரி.ogg" not found) ( British Colonial Period English: Cape Comorin, (Kanyakumari) - Malayalam:കന്യാകുമരി), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒர் சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் கன்னியாகுமரி தொடருந்து நிலையம் உள்ளது. கன்னியாகுமரியில் தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்த கேந்திரம் அமைந்துள்ளது. கன்னியாகுமரி கடற்கரையில் நாள்தோறும், அதிகாலையில் சூரியோதயம் மற்றும் மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனம் காட்சிகளை பார்க்கலாம்.

அமைவிடம்

இம்மாவட்டமானது இவ்வுரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இங்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவை இணைகின்றன. இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு உலகப் புகழ் சுற்றுலாத் தலமாகும். இங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133-அடி திருவள்ளுவர் சிலை ஆகியவை புகழ்பெற்றவை. கன்னியாகுமரியில் தான் மகாத்மா காந்தியடிகளுடைய சாம்பல் (அஸ்தி) கரைக்கப்பட்டது. காந்தியடிகள், காமராஜரின் நினைவு மண்டபம் கன்னியாகுமரியில் உள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,525 வீடுகளும், 22,453 மக்கள்தொகையும் கொண்டது.[3] [4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் Coordinates: Missing latitude
Invalid arguments have been passed to the {{#coordinates:}} function ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0 மீட்டர் (0 அடி) உயரத்தில் இருக்கின்றது. தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் 5 நிலங்களில் குறிஞ்சி (மலை), முல்லை (காடு), மருதம் (வயல்), நெய்தல் (கடல்) ஆகிய 4 நிலப்பகுதியும் கன்னியாகுமரி பகுதியில் உள்ளன.

வரலாறு

சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக 'கன்னியாகுமரி' என்று அழைக்கப்பட்டது. குமரிக் கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியின் பழைய பெயர் "ஆயுத்யா நாடு" (Ayuthya Nadu) எனவும், கொரிய இளவரசி Heo Hwang Ok (செம்பவளம்)யின் பிறந்த இடம் இதுதான் எனவும் ஒரு கருத்து உள்ளது. பண்டைய பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி இருந்து வந்தது.பிற்காலத்தில் கேரள மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. இந்தியா விடுதலை பெற்றபின் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டபோது மார்ஷல் நேசமணி அவர்களின் தலைமையில் நடந்த கடும் போராட்டத்துக்குப்பின் தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைந்தது.

சுற்றுலா இடங்கள்

படிமம்:Kanniyakumari.JPG
விவேகானந்தர் நினைவு மண்டபமும் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் முழு உருவச் சிலையும்

கன்னியாகுமரி கடற்கரை இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு எழில் மிகுந்த கடற்கரையாகும். இந்தியாவின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் இடங்களில் ஒன்றாக உள்ள இக்கடற்கரை கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கடற்கரைப் பகுதியில் பகவதி அம்மன் கோயில், மகாத்மா காந்தி மண்டபம், விவேகானந்தர் பாறை, காமராசர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை போன்றவை சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களாகும். இங்கு நிகழும் சூரிய உதயம் , சூரிய மறைவு நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இக்கடற்கரையில் கூடுகின்றனர். இந்தக் கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது.

போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலை 7 (வாரணாசி-பெங்களூரு-கன்னியாகுமரி) கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறது. தென்னக இரயில்வேயின், திருவனந்தபுரம் கோட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி தொடருந்து நிலையம் உள்ளது. ஐந்து நாட்களில், 4273 கிலோ மீட்டர், பயணிக்கும் இந்தியாவின் மிக நீண்ட தூரம் மற்றும் நேர ரயிலான விவேக் விரைவு ரயில், கன்னியாகுமரியையும் திப்ருகார் (அசாம்) இணைக்கிறது.[6]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. [பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]
  4. Kanniyakumari Population Census 2011
  5. "Kanniyakumari". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  6. Longest Running Train (by Time) in India

வெளி இணைப்புகள்