இந்திய நாடாளுமன்றம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்திய நாடாளுமன்றம்
இந்திய சின்னம்
வகை
வகை
அவைகள்மாநிலங்களவை (மேலவை)
மக்களவை (கீழவை)
வரலாறு
தோற்றுவிப்பு26 சனவரி 1950 (74 ஆண்டுகள் முன்னர்) (1950-01-26)
முன்புஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்
தலைமை
மாநிலங்களவைத் துணைத் தலைவர்
ஹரிவன்ஷ் நாராயண் சிங்[3], ஐக்கிய ஜனதா தளம்
14 செப்டம்பர் 2020 முதல் முதல்
பெரும்பான்மைத் தலைவர் (மாநிலங்களவை)
பியுஷ் கோயல்[4], பாஜக
14 ஜூலை 2021 முதல் முதல்
எதிர்க்கட்சித் தலைவர் (மாநிலங்களவை)
காலியிடம், இதேகா
1 அக்டோபர் 2022 முதல் முதல்
மக்களவைத் துணைத்தலைவர்
காலி
23 மே 2019 முதல் முதல்
பெரும்பான்மைத் தலைவர் (மக்களவை)
எதிர்க்கட்சித் தலைவர் (மக்களவை)
காலியிடம் (26 மே 2019)
கட்டமைப்பு
உறுப்பினர்கள்788

245 மாநிலங்களவை உறுப்பினர்கள்

543 மக்களவை உறுப்பினர்கள்
Rajya Sabha Updated July 2022.svg.png
மாநிலங்களவை அரசியல் குழுக்கள்
  • அரசு (128)
  • எதிர்க்கட்சி (111)
  • காலியிடம் (6)
17th Lok Sabha Updated August 2022.svg.png
மக்களவை அரசியல் குழுக்கள்
  • அரசு (368)
  • எதிர்க்கட்சி (174)
  • காலியிடம் (1)
தேர்தல்கள்
அண்மைய மாநிலங்களவை தேர்தல்
10 ஜூன் 2022
Last மக்களவை election
11 ஏப்ரல் – 19 மே 2019
அடுத்த மாநிலங்களவை தேர்தல்
2023
அடுத்த மக்களவை தேர்தல்
மே 2024
கூடும் இடம்
Glimpses of the new Parliament Building, in New Delhi (2).jpg
புதிய நாடாளுமன்றக் கட்டிடம், புது தில்லி, இந்தியா
வலைத்தளம்
parliamentofindia.nic.in
அரசியலமைப்புச் சட்டம்
இந்திய அரசியலமைப்பு

இந்திய நாடாளுமன்றம் (Parliament of India) என்பது இந்தியக் குடியரசு நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மன்றமாகும். இது மாநிலங்களவை (Rajya Sabha) மற்றும் மக்களவை (Lok Sabha) என்று இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை ஆகும்.

அமைச்சரவை நாடாளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்குக் கடமையுற்றது.

மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு ஆண்டுகளுக்குப் பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலுக்குச் செல்ல வேண்டியிருக்கும். மக்களவை, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களை கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.

செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரைக் குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கு ஏற்ப பிற அமைச்சர்களைக் குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.

நாடாளுமன்ற விதிகளும் நடைமுறையும்

  • நாடாளுமன்ற மேலவையிலோ(மாநிலங்களவை) கீழவையிலோ (மக்களவை) பேசும் நாடாளுமன்ற உறுப்பினர், ஆங்கிலம், இந்தி மற்றும் எட்டாவது அட்டவணையில் உள்ள பிற மொழிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் பேசலாம். இந்தி, ஆங்கிலம் அல்லாது எட்டாவது அட்டவணையில் உள்ள மொழியில் பேச விரும்புவோர், அரை மணி நேரம் முன்கூட்டியே பேச விரும்பும் மொழியைக் குறிப்பிட வேண்டும். உறுப்பினர் பேசுவதை மொழிபெயர்ப்பாளர்கள் மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்த்துக் கூறுவர். மொழிபெயர்ப்பு வசதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒரியா, சமசுகிருதம், பஞ்சாபி, மணிப்புரி ஆகிய மொழிகளுக்கு மட்டும் உள்ளது.[7]

இந்திய நாடாளுமன்ற மக்களவை

மக்களவை அல்லது லோக் சபா இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவை ஆகும். இந்த அவையின் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543. இஃது ஒன்றியப் பிரதேச தொகுதிகளையும், நியமன உறுப்பினர்களான ஆங்கிலோ இந்தியர் இருவரையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இஃது இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்படுள்ளதின்படி வரையறுக்கப்பட்டதாகும்.

ஆங்கிலோ இந்தியரை பொறுத்தவரை இதுவே இந்த அவையின் அதிகபட்ச அமர்வு எண்ணிக்கையாகும் இருப்பினும் குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையைக் கூட்டவோ குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலின் மூலம் இந்த அவை நாட்டின் 15 ஆவது மக்களவையை தொடங்கியுள்ளது. இவர்கள் மக்களின் நேரடியான சார்பாளர்கள் ஆவர். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு இதன் ஆயுள் மற்றும் பொறுப்புகள் தானாகவே செயலிழந்துவிடும். அவசரநிலைப் பிரகடன காலத்தின் இதன் செயல்பாடுகளைக் குறிப்பிட்டகாலம் வரை முடக்கப்படலாம் அல்லது ஒரு வருடம் காலம் வரை நீட்டித்து முடக்கலாம். மக்களவையைத் தலைமையேற்று வழிநடத்துபவராக மக்களவைத் தலைவர் செயல்படுகின்றார். இவரின் வழிகாட்டுதலின்படி மக்களவை உறுப்பினர்கள் மக்களவையில் செயல்படுகின்றனர்.

தற்பொழுது 17 ஆவது மக்களவை நடைபெறுகின்றது. மக்களவைத் தொகுதிக்கான எல்லைகள் மற்றும் சீரமைவுகள் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதும் அல்லது தேர்தல் ஆணையத்தினராலும் மேற்கொள்ளப்படும். இருப்பினும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை இந்த சீரமைவுகள் பாதிக்காது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதின்படி அந்த மக்களவையின் ஆயுள் முழுவதும் தொடர்வார்.

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை

இந்திய நாடாளுமன்றம்

மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா இந்திய நாடாளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்த்து மற்றவர் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர். இதன் கட்டமைவு இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்பட்டுள்ளதின்படி அமைக்கப்பட்டுள்ளது.

இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேல்சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூர்த்தியாகும். குடியரசுத் துணைத்தலைவர் இந்த அவையின் தலைவராக இருப்பார்.

மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறுவதாகும் சபை கலைப்பிற்கு இது பொருந்தாது. இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு ஈடானதாகவும் மக்களவைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் குறைக்காதனவாகவும் கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளை இரு அவைகளின் கூட்டு, கூட்டு அமர்வின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டு அமர்வுகளில் மக்களவை மாநிலங்களைவையை விட இரு மடங்கு உறுப்பினர்களைக் கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள (defacto) தடை (வீட்டோ) அதிகாரங்களைக் கொண்டதாகக் கூட்டு கூட்டங்களில் கருதப்படுகின்றது.

மாநிலங்களவையின் தற்பொழுதய அலுவல் நிலை (ex-officio) கூட்டத் தலைவராக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் மேதகு ஜகதீப் தன்கர் பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிமாகக் கூட்டத்லைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர்.

  • மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952 அன்று தொடங்கப்பட்டது.

நாடாளுமன்ற கட்டடம்

நாடாளுமன்றம் அல்லது இந்தியில் சன்சத் பவன் எனப்படும் இம்மண்டபம் வட்டவடிவ அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதை வடிவமைத்து நிர்மானித்தவர்கள் சர் எட்வின் லுத்தியன்ஸ் மற்றும் சர் எர்பர்ட் பேக்கர். பிரித்தானிய கட்டிடக் கலை வல்லுநரான இவர்கள் 1912-1913 ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்டு இதன் கட்டுமானம். 1921 இல் தொடங்கப்பட்டு பின் 1927 இல் மாநிலங்களவைக்காகவும் (home of the concil of state), மைய சட்டமன்றத்திற்காகவும் மற்றும் இளவரசர்களின் மாளிகைக்காகவும் (Chamber of Princes) திறக்கப்பட்டது. 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சவ்சாத் யோகினி கோவிலின் தோற்றமே இந்திய நாடாளுமன்றத்தின் முன்மாதிரி என்றும் கூறப்படுகின்றது.[8]

இதன் வெளி கட்டுமான சுவர் 144 பளிங்குத்தூண்களால் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் அவைகள் மைய மண்டபமான ஜன்பத் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதனின்று செல்வதற்கு வசதியாக குடியரசுத்தலைவர் மாளிகைக்கு இணைக்கும் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றத்தை இந்திய கேட் பகுதியில் இருந்தும் பார்க்கமுடியும்.

இட வசதியைக் கருத்தில் கொண்டு கட்டப்பட்ட புதிய நாடாளு மன்றக் கட்டடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி 2023 மே 20-ஆம் திறந்து வைத்தார். பழைய இந்தக் கட்டடம் விடைபெற்றுக்கொள்கிறது.[9]

மேற்கோள்கள்

  1. "Droupadi Murmu takes oath as the 15th President of India". The Hindu (New Delhi, India). 25 July 2022 இம் மூலத்தில் இருந்து 25 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220725161244/https://www.thehindu.com/news/national/droupadi-murmu-takes-oath-as-countrys-15th-president/article65681087.ece. 
  2. "Jagdeep Dhankhar sworn in as 14th Vice-President of India". The Times of India (Mumbai, India). 11 August 2022. https://timesofindia.indiatimes.com/india/jagdeep-dhankhar-sworn-in-as-14th-vice-president-of-india/articleshow/93493035.cms. 
  3. "Harivansh Narayan Singh re-elected Rajya Sabha deputy chairman | India News - Times of India" (in en). The Times of India. 14 September 2020 இம் மூலத்தில் இருந்து 14 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200914141546/https://timesofindia.indiatimes.com/india/harivansh-re-elected-rs-deputy-chairman-he-belongs-to-all-sides-of-aisle-says-pm/articleshow/78107220.cms. 
  4. "Minister Piyush Goyal To Be Leader Of House in Rajya Sabha". NDTV. Archived from the original on 14 July 2021. பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.
  5. "Om Birla unanimously elected Lok Sabha Speaker, PM Modi heaps praises on BJP colleague" (in en). India Today. 19 June 2019. https://www.indiatoday.in/india/story/om-birla-appointed-lok-sabha-speaker-1551719-2019-06-19. 
  6. "Narendra Modi is sworn in as the 15th Prime Minister of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 26 May 2014 இம் மூலத்தில் இருந்து 6 September 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140906183222/http://timesofindia.indiatimes.com/news/Narendra-Modi-is-sworn-in-as-the-15th-Prime-Minister-of-India/articleshow/35620796.cms. பார்த்த நாள்: 15 August 2014. 
  7. மொழிபெயர்ப்பு வசதி = இந்திய நாடாளுமன்றம்
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-19. பார்க்கப்பட்ட நாள் 2014-09-01.
  9. தினத்தந்தி, நாளிதழ், 18-9-2023 பக்கம் 2

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இந்திய_நாடாளுமன்றம்&oldid=62164" இருந்து மீள்விக்கப்பட்டது