திருத்தணி வட்டம்
திருத்தணி வட்டம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திருத்தணி நகரம் உள்ளது.
இந்த வட்டம் 6 உள்வட்டங்களும், 87 வருவாய் கிராமங்களும் கொண்டது. [2]
இவ்வட்டத்தில் திருத்தணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருத்தணி முருகன் கோயில் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 211,291 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 105,568 ஆண்களும், 105,723 பெண்களும் உள்ளனர். 52,490 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 78.8% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 73.75%மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,001 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 23184 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 920 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 57,297 மற்றும் 6,288 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 94.14%, இசுலாமியர்கள் 4.1% , கிறித்தவர்கள் 1.51% மற்றும் பிறர் 0.25% ஆகவுள்ளனர்.[3]