இராமநாத ஈசுவரன் கோவில்
இராமநாத ஈசுவரன் திருக்கோவில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | இராமநாத ஈசுவரன் திருக்கோவில் |
அமைவிடம் | |
ஊர்: | போரூர் |
மாவட்டம்: | திருவள்ளூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | இராமநாத ஈசுவரர் |
தாயார்: | சிவகாமசுந்தரி |
தல விருட்சம்: | வேம்பு |
சிறப்பு திருவிழாக்கள்: | பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி, குருபெயர்ச்சி |
இராமநாத ஈசுவரன் கோவில், என்பது சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள போரூரில் அமைந்துள்ள பழமையான சிவன் கோவிலாகும். அண்மையில் இராஜகோபுரம், கொடிமரம் எழுப்பப் பட்டுள்ளன.
மரபு வரலாறு
இராமர் தன் மனைவியான சீதா பிராட்டியினைத் தேடி இலங்கை நோக்கிப் பயணித்த போது பலகாடுகளையும் சுற்றித் திரிந்தார். அந்நிலையில் இந்த போரூரை அடைந்தபோது ஓரிடத்தில் அவர் கால் பட்டு, பூமியிலிருந்து இரத்தம் சொட்ட, அவ்விடத்தை தோண்டிய போது ஒரு சிவலிங்கம் இருப்பதைக் கண்ணுற்று திடுக்குற்றார். தன் கால் சிவன் மீது பட்டதே என வருந்தி, ஒரு மண்டலம் அந்த இடத்திலேயே சிவபூசனைகளைச் செய்தார். பெரும் காடாக இருந்த அவ்விடத்திலுள்ளத் திருக்கோவிலே இராமநாத ஈசுவரர் கோவிலாகும். மிகவும் பழமையான இக் கோவில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டது. சிவபெருமானின் வழிகாட்டுதலாலேயே இராமர் இராமேசுவரத்திற்கும், பின் இலங்கைக்கும் சென்று சீதா பிராட்டியினை மீட்டுத் திரும்பியதாக மரபு வரலாறு கூறுகிறது. இராமர் சிவனை குருவாக வணங்கியமையால் இத்தலம் குருதலமாகக் கருதப்படுகிறது.
கோவில் அமைப்பு
மூலவர் இராமநாத ஈசுவரர், மிகப்பெரிய சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கியுள்ளார். இவரது கருவறை தூங்கானை மாட அமைப்பிலுள்ளது. அம்மன் சிவகாமசுந்தரிக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. நந்திகேசுவரருக்கு அருகில் தெற்கு நோக்கி, சண்டிகேசுவரர் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். சுற்றுப்பிரகாரத்தில் பிரம்மாவுக்கும் சன்னிதியுள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் வேம்பு.