சிங்கம்புணரி வட்டம்
Jump to navigation
Jump to search
சிங்கம்புணரி வட்டம், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் ஒன்பது வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1] திருப்பத்தூர் வட்டத்தின் 41 வருவாய் கிராமங்களைக் கொண்டு சிங்கம்புணரி வட்டம் 2016ல் நிறுவப்பட்டது.[2] தேவகோட்டை வருவாய் கோட்டத்தில் அமைந்த சிங்கம்புணரி வருவாய் வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் சிங்கம்புணரியில் இயங்குகிறது. இவ்வட்டத்தில் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
வட்ட நிர்வாகம்
சிங்கம்புணரி வருவாய் வட்டம் எஸ். எஸ். கோட்டை, சிங்கம்புணரி மற்றும் வரப்பூர் என மூன்று உள்வட்டங்களும், 41 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது. [3]அவைகள்:
- குளத்துப்பட்டி
- வரப்பூர்
- உலகம்பட்டி
- மண்டகுடிப்பட்டி
- நெடுவயல்
- மின்னமலைப்பட்டி
- மேலவண்ணாரிருப்பு
- மணலூர்
- செம்மண்பட்டிபுதூர்
- கீழவயல்
- வலசைப்பட்டி
- முசுண்டப்பட்டி
- கரிசல்பட்டி
- தர்மபட்டி
- செட்டிக்குறிச்சி
- பிரான்பட்டி
- மேல்பட்டி
- கிருங்கக்கோட்டை
- பிரான்மலை
- சிறுமருதூர்
- டி. காளப்பூர்
- சிங்கம்புணரி வடக்கு
- சிங்கம்புணரி தெற்கு
- காளப்பூராயன்
- காயம்பட்டி
- சூரக்குடி
- சதுர்வேதமங்கலம்
- முறையூர்
- சேவல்பட்டி
- மேலையூர்
- மாத்தூர்
- எருமைப்பட்டி
- நயினாப்பட்டி
- ஜெயம்கொண்டநிலை
- மல்லக்கோட்டை
- வடவன்பட்டி
- மாம்பட்டி தெற்கு
- மாம்பட்டி வடக்கு
- மாம்பட்டி தேவஸ்தானம்
- ஏரியூர்
- அரளிக்கோட்டை