திருவெண்ணெய்நல்லூர் வட்டம்
Jump to navigation
Jump to search
திருவெண்ணெய் நல்லூர் வட்டம், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தின் 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் திருவெண்ணெய்நல்லூரில் இயங்குகிறது. விழுப்புரம் வருவாய் கோட்டத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூர் வட்டம் அரசூர், திருவெண்ணெய்நல்லூர், சித்தலிங்கமடம் என மூன்று ஃபிர்கா எனப்படும் உள்வட்டங்களையும்; 66 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[1]
இவ்வட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி உள்ளது.
வருவாய் கிராமங்கள்
அரசூர் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- அரசூர்
- அத்திபட்டு
- அரும்பட்டு
- ஆனத்தூர்
- ஆலங்குப்பம்
- ஆணைவாரி
- இருவேல்பட்டு
- சித்தானங்கூர்
- சேமங்கலம்
- கரடிபாக்கம்
- கண்ணாரம்பட்டு
- காரபட்டு
- காந்தலவாடி
- கீழ்தணிலாம்பட்டு
- குமாரமங்கலம்
- கூரானூர்
- மாமண்டூர்
- மாதம்பட்டு
- மேல்தணிலாம்பட்டு
- பருகம்பட்டு
- பேரங்கியூர்
- பொய்கைஅரசூர்
- திருமுண்டிச்சரம்
- தென்மங்கலம்
திருவெண்ணெய் நல்லூர் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- அண்ராயநல்லூர்
- ஆமுர்
- இளந்துரை
- எரளுர்
- ஏமப்பூர்(வடக்கு)
- ஏமப்பூர்(தெற்கு)
- ஏனாதிமங்கலம்
- துலக்கம்பட்டு
- கொங்கராயநல்லூர்
- கொத்தனூர்
- கீழமங்கலம்
- சரவணபாக்கம்
- சாத்தனூர்
- சின்ன செவலை
- சிறுவானூர்
- சிறுமதுரை
- செம்மார்
- பனப்பாக்கம்
- பெரியசெவலை
- பையூர்
- மணக்குப்பம்
- மழவராயனூர்
- மழையம்பட்டு
- மாரங்கியூர்
- மேலமங்கலம்
- தடுத்தாட்கொண்டூர்
- திருவெண்ணெய்நல்லூர்(தெற்கு)
- திருவெண்ணெய்நல்லூர்(வடக்கு)
- தி.எடையார்
- வளையாம்பட்டு
சித்தலிங்கமடம் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- அரிங்குரிங்கை
- அக்கனூர்
- ஒட்டந்தல்
- கொண்டசமுத்திரம்
- கொணலவாடி
- சித்தலிங்கமடம் (தெற்கு)
- சித்தலிங்கமடம் (வடக்கு)
- பாவந்தூர்
- பெண்ணைவலம்
- மெய்யூர்
- தி.புதுப்பாளையம்
- தி.கொளத்தூர்
மக்கள் தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 30,405 குடியிருப்புகள் கொண்ட திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தின் மக்கள் தொகை 135,304 ஆகும். இதில் ஆண்கள் 68,577 மற்றும் பெண்கள் 66,727 உள்ளனர்.[2]