விழுப்புரம் வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

விழுப்புரம் வட்டம் , தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக விழுப்புரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 123 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]இவ்வட்டத்தில கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

இவ்வட்டத்தில் வளவனூர் பேரூராட்சி உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 697,569 ஆகும். அதில் 349,406 ஆண்களும், 348,163 பெண்களும் உள்ளனர். 163,568 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 79.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 77.33% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 79030 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 949 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 189,653 மற்றும் 5,197 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.57%, இசுலாமியர்கள் 3.51%, கிறித்தவர்கள் 3.72% , சமணர்கள் 0..07% மற்றும் பிறர் 0.02% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=விழுப்புரம்_வட்டம்&oldid=97252" இருந்து மீள்விக்கப்பட்டது