திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் | |
அமைவிடம் | 11°18′46″N 78°07′58″E / 11.31282°N 78.132784°ECoordinates: 11°18′46″N 78°07′58″E / 11.31282°N 78.132784°E |
நாடு | இந்தியா |
மாவட்டம் | விழுப்புரம் |
வட்டம் | திருவெண்ணெய்நல்லூர் |
மக்களவைத் தொகுதி | திருவெண்ணெய்நல்லூர் |
மக்கள் தொகை • அடர்த்தி |
9,623 (2011[update]) • 1,485/km2 (3,846/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 6.48 சதுர கிலோமீட்டர்கள் (2.50 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/t-v-nallur |
திருவெண்ணெய்நல்லூர் (ஆங்கிலம்:Thiruvennainallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் வட்டம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும். திருவெண்ணெய்நல்லூர் நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
இப்பேரூராட்சிப் பகுதியில் கிருபாபுரீஸ்வரர் கோயில் மற்றும் மெய்கண்டதேவர் கோயில் அமையப்பெற்றுள்ளது. திருவெண்ணெய்நல்லூர் நகரம் தொண்டை மண்டலத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அமைவிடம்
விழுப்புரத்திலிருந்து 22 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்கு 6 கிமீ தொலைவில் திருவெண்ணெய்நல்லூர் ரோடு தொடருந்து நிலையம் உள்ளது.[1] இதன் கிழக்கில் பண்ருட்டி 22 கிமீ; மேற்கில் திருக்கோயிலூர் 23 கிமீ; வடக்கில் விழுப்புரம் 22 கிமீ; தெற்கில் உளுந்தூர்பேட்டை 23 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
6.48 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, திருக்கோயிலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,121 வீடுகளும், 9,623 மக்கள்தொகையும் கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 82% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 979 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 887 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,623 மற்றும் 46 ஆகவுள்ளனர்.[3]
ஆதாரங்கள்
- ↑ https://indiarailinfo.com/arrivals/tiruvennainallur-tvnl/4853
- ↑ "திருவெண்ணைய்நல்லூர் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-04-28. பார்க்கப்பட்ட நாள் 2019-04-27.
- ↑ Thiruvennainallur Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011