மேலூர் வட்டம்
மேலூர் வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமும், வட்டாட்சியர் அலுவலகமும் மேலூர் நகரத்தில் உள்ளது. இவ்வட்டத்தில் அரிட்டாபட்டி பல்லுயிர் சூழலியல் பாரம்பரியத் தளம் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் 8 உள்வட்டங்களும், 84 வருவாய் கிராமங்களும் உள்ளது. [2]
இதனையும் காண்க
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 74,851 வீடுகளும், 2,91,398 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் ஆண்கள் 1,46,711 ஆகவும்; பெண்கள் 1,44,687 ஆகவும் உள்ளனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 76.57% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 986 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 886 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 48,121 மற்றும் 371 ஆகவுள்ளனர்.[3]
மேற்கோள்கள்
- ↑ "மதுரை வருவாய் மாவட்ட நிர்வாகம்". Archived from the original on 2019-04-12. பார்க்கப்பட்ட நாள் 2018-08-30.
- ↑ மேலூர் வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்
- ↑ Melur Taluka Population, Religion, Caste, Working Data Census 2011