திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் (THIRUPARANKUNDRAM PANCHAYAT UNION), இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருப்பரங்குன்றம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருநகரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,69,335 பேர் ஆவர். அதில் ஆண்கள் 85,548 பேர்; பெண்கள் 83,787 பேர் உள்ளடங்குவர். பட்டியல் சாதி மக்களின் மக்கள் தொகை 25,632 பேர் ஆவர். அதில் ஆண்கள் 12,805 பேர்; பெண்கள் 12,827 பேர் ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,447 பேர் ஆக உள்ளனர். அதில் ஆண்கள் 732 பேர் ; பெண்கள் 715 பேர் ஆக உள்ளனர்.[2]

ஊராட்சி மன்றங்கள்

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தின் 38 ஊராட்சி மன்றங்களின் விவரம்:[3]

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்