செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம்
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் (CHELLAMPATTI PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருமங்கலம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தில் இருபத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [2]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் செல்லம்பட்டியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 87,132 ஆகும். அதில் ஆண்கள் 44,634; பெண்கள் 42,498 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 15,065 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 7,562; பெண்கள் 7,503 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 14 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 10; பெண்கள் 4 ஆக உள்ளனர்.[3]
ஊராட்சி மன்றங்கள்
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]
- அய்யனார்குளம்
- ஆரியபட்டி
- ஏ. புதுப்பட்டி
- ஏரவார்பட்டி
- கட்டகருப்பன்பட்டி
- கண்ணனூர்
- கருமாத்தூர்
- குறவகுடி
- கொடிக்குளம்
- கோவிலாங்குளம்
- சக்கரப்பநாய்க்கனூர்
- சடச்சிபட்டி
- சிந்துபட்டி
- செம்பட்டி
- திடியன்
- தும்மகுண்டு
- நாட்டார்மங்கலம்
- பன்னியான்
- பாணாமூப்பன்பட்டி
- பாப்பாபட்டி
- புள்ளநேரி
- பூதிபுரம்
- பொட்டுலுப்பட்டி
- பொறுப்புமேட்டுப்பட்டி
- போடுவார்பட்டி
- முதலைகுளம்
- வாலாந்தூர்
- விக்கிரமங்கலம்
- வேப்பனூத்து
வெளி இணைப்புகள்
- மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
- ↑ மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.
- ↑ Madurai District Census, 2011
- ↑ செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் 29 கிராம ஊராட்சிகள்