பரவை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பரவை, இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டத்தில், வைகை ஆற்றின் வடகரையில் அமைந்த தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இவ்வூர் மதுரை மாநகருக்கு மேற்கில், மதுரை - திண்டுக்கல் சாலையில் 9 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு அருள்மிகு ஸ்ரீமுத்துநாயகி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பத்து நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா இவ்வூரினர் ஆவார். இதன் அஞ்சல் சுட்டு எண் 625402 ஆகும்.

அருகமைந்த ஊர்களும் நகரங்களும்

பரவை பேரூராட்சியின் கிழக்கில் மதுரை 12 கிமீ; மேற்கில் வாடிப்பட்டி 15 கிமீ; வடக்கில் அலங்காநல்லூர் 15 கிமீ; தெற்கில் நாகமலைப்புதுக்கோட்டை 15 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8.99 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 105 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5213 வீடுகளும், 20,042 மக்கள்தொகையும் கொண்டது. [2][3] [4]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பரவை&oldid=118424" இருந்து மீள்விக்கப்பட்டது