இம்மையிலும் நன்மை தருவார் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Immaiyilum nanmai tharuvaar Temple.jpg
இம்மையிலும் நன்மை தருவார் கோயில்

இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை நகரின் மையப் பகுதியில், தெற்கு மாசி வீதி - மேலமாசி வீதி சந்திப்பில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த நிலையில் அமைந்த லிங்கத்திற்கு கீழ்புறத்தில் சிவனும் பார்வதியும் இலிங்கத்திற்கு பூஜை செய்யுமாறு மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றனர். இத்தலம் பூலோக கைலாயம் என வழங்கப்படுகிறது. இக்கோவிலின் மூலவர் பெயர் சொக்கநாதர். அம்பாள் பெயர் மத்தியபுரி நாயகி. உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தர் ஆவார். தல விருட்சம் வில்வம் மரம் ஆகும். [1]. இக்கோயில் மேற்கு திக்கு நோக்கி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர்க் காரணம்

இப்பிறப்பில் செய்த பாவங்களை இப்பிறப்பிலேயே மன்னித்து நன்மை தருவதால், இக்கோயில் மூலவர் சொக்கநாதரை இம்மையிலும் நன்மை தருவார் என்று அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு

மதுரையை ஆண்ட மீனாட்சியை சிவபெருமான் மணந்து கொண்டார். பின் இத்தலத்தில் ஒரு லிங்கத்தை பிரதிட்டை செய்து, பூஜித்த பின்பே மதுரையின் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

சன்னதிகள்

இத்தலத்தில் ஜுரத்தைக் நீக்கும் ஜுரதேவர், மனைவி ஜுரசக்தியுடன் காட்சி அளிக்கும் சன்னதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் விசாலாட்சியுடன் வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார். இக்கோயில் சண்டிகேஸ்வரை சிவனிடம் பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். பைரவர் சன்னதி புகழ்பெற்றது. இங்கு அம்பாள் சன்னதி பீடத்தில் கல்லால் ஆன ஸ்ரீசக்கரம் அமைந்துள்ளது.

வேண்டுதல்கள்

  • திருமணமாகாதவர்கள் இக்கோயில் அம்மனை வேண்டினால் நல்ல வரன் அமையும் என்பதால் அம்மனுக்கு "மாங்கல்ய வரபிரசாதினி' என்ற பெயருமுண்டு.
  • மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பூமித் தலமென்பதால், புது கட்டடம் கட்டத் துவங்குபவர்கள் பிடி மண்ணை எடுத்து வந்து வழிபட்டு, அம்மண்ணைக் கொண்டு கட்டிடத்தை எழுப்புகிறார்கள்.
  • சிவபெருமானே மதுரையின் அரசராக பொறுப்பேற்கும் முன் இங்கு லிங்க பூஜை செய்ததால், பொறுப்பான பதவி ஏற்கும் முன்பும் சிவனுக்கு, "ராஜ உபச்சார அர்ச்சனை' செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க