ஆம்பூர் வட்டம்
Jump to navigation
Jump to search
ஆம்பூர் வட்டம், தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆம்பூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 77 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2] இதன் வட்டாட்சியர் அலுவலகம் (தாலுகா அலுவலகம்) கன்னிகாபுரத்தில் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஆம்பூர் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 3,26,211 ஆகும். எழுத்தறிவு 80.43% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1,026 பெண்கள் வீதம் உள்ளனர்.[3]