பட்டுக்கோட்டை வட்டம்
Jump to navigation
Jump to search
பட்டுக்கோட்டை வட்டம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பட்டுக்கோட்டை நகரம் உள்ளது.
இந்த வட்டத்தில் கீழ்குறிச்சி, திருச்சிற்றலம்பலம், அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, நம்பிவயல், பெரியகோட்டை, துவரங்குறிச்சி, மதுக்கூர், ஆண்டிக்காடு, மற்றும் பட்டுக்கோட்டை என 10 உள்வட்டங்களும், 175 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]
இவ்வட்டத்தில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]
- மக்கள்தொகை = 396,236
- ஆண்கள் = 191,332
- பெண்கள் = 204,904
- குடும்பங்கள் = 100,914
- கிராமப்புற மக்கள்தொகை = 69.6%
- எழுத்தறிவு = 80.49%
- பாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 1,071 பெண்கள் வீதம் உள்ளனர்
- 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 39869
- குழந்தைகள் பாலின விகிதம்: 1000 ஆண் குழந்தைகளுக்கு, 965 பெண் குழந்தைகள்.
- பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் =45,295 மற்றும் 969
சமயம்
- இந்துக்கள் = 85.42%
- இசுலாமியர்கள் = 10.5%
- கிறித்தவர்கள் = 3.85%
- பிறர்= 0.23%