மதுக்கூர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மதுக்கூர்
—  பேரூராட்சி  —
மதுக்கூர்
இருப்பிடம்: மதுக்கூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°29′N 79°24′E / 10.48°N 79.4°E / 10.48; 79.4Coordinates: 10°29′N 79°24′E / 10.48°N 79.4°E / 10.48; 79.4
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் பட்டுக்கோட்டை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் பி. பிரியங்கா, இ. ஆ. ப [3]
தலைவர் SNS M.Hவகிதா பேகம் ஹாஜா முகைதீன்
மக்கள் தொகை

அடர்த்தி

16,266 (2011)

3,253/km2 (8,425/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi)

3 மீட்டர்கள் (9.8 அடி)

இணையதளம் www.townpanchayat.in/madukkur

மதுக்கூர் (ஆங்கிலம்:Madukkur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

மதுக்கூர் பேரூராட்சிக்கு கிழக்கே முத்துப்பேட்டை 18 கிமீ; மேற்கே பட்டுக்கோட்டை 12 கிமீ; வடக்கே மல்லிப்பட்டினம் 35 கிமீ; தெற்கே மன்னார்குடி 22 கிமீ ஒரத்தநாடு 25 கிமீ உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

5 சகிமீ பரப்பும், 15அ வார்டுகளும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,007 வீடுகளும், 16,266 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் Coordinates: Missing latitude
Invalid arguments have been passed to the {{#coordinates:}} function ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3 மீட்டர் (9 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மதுக்கூரில் புகழ்பெற்றவர்கள்

  • அத்தி கோ. இராமலிங்கம், பேச்சாளர், இலக்கியவாதி
  • மரைக்காயர் - இவரது பெயர் முகமது யாக்கூப் மரைக்காயர். இலக்கியத்தில் உரையாடுவதில், அழகிய தமிழில் பேசுவதில் சிறந்தவர். மதுக்கூர் சுற்று வட்டாரம் முழுவதும் புகழ்பெற்றவர். இவரை 'மதுக்கூர் கம்பன்' என்று அழைத்து வந்தனர்.
  • மதுக்கூர் மஜீத் - இவரது முழுப்பெயர் அப்துல் மஜீத். மதுக்கூர் சுற்று வட்டாரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தனது பழக்க வழக்கத்தால் பரிச்சயமானவர். இஸ்லாமிய பாடல்கள் சொந்தமாக தானே இயற்றி பாடி, பல மேடை கச்சேரிகள் செய்து வந்துள்ளார். சிங்கப்பூர் மலேசியாவிலும் கச்சேரிகள் செய்து வந்துள்ளார்.
  • மதுக்கூர் கண்ணன் - அல்லிதந்த வானம் அன்னையல்லவா, சொல்லி தந்த பூமி தந்தையல்லவா..என்ற வரிகளை தமிழ் உலகிற்கு தந்தவர் தான் 'மதுக்கூர் கண்ணன்'. யார் திரைப்படத்தை இயக்கியதால்இவரை 'யார்கண்ணன்' என்றும் அழைக்கிறார்கள்.
  • மதுக்கூர் இராமலிங்கம் - தமிழகம் முழுவதும் பல மேடைகளிலும் லியோனியுடன் சேர்ந்து பல பட்டிமன்றங்களில் பேசி இன்றும் இலக்கிய பணியில் வாழ்ந்து வருகிறார்.

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. மதுக்கூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Madukkur Population Census 2011
  6. Madukkur Town Panchayat
  7. "Madukkur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)


"https://tamilar.wiki/index.php?title=மதுக்கூர்&oldid=121152" இருந்து மீள்விக்கப்பட்டது