முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்)
முத்துப்பேட்டை | |||||||
— தேர்வுநிலை பேரூராட்சி — | |||||||
அமைவிடம் | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருவாரூர் | ||||||
வட்டம் | முத்துப்பேட்டை வட்டம் | ||||||
ஆளுநர் | [1] | ||||||
முதலமைச்சர் | [2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | தி. சாருஸ்ரீ, இ. ஆ. ப [3] | ||||||
பேரூராட்சி தலைவர் | திருமதி மும்தாஜ் நவாஸ் கான் (தி.மு.க.) | ||||||
மக்களவைத் தொகுதி | நாகப்பட்டினம் | ||||||
மக்களவை உறுப்பினர் |
மு.செல்வராசு | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
41,722 (2011[update]) • 5,349/km2 (13,854/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 7.80 சதுர கிலோமீட்டர்கள் (3.01 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/muthupettai |
முத்துப்பேட்டை (Muthupet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை வட்டத்தை சேர்ந்த ஒரு நகரம் மற்றும் தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் முத்துப்பேட்டையில் உள்ளது. சதுப்புநிலக் காடுகளுக்காகவும் , முத்துப்பேட்டை தர்கா போன்ற சுற்றுலா தலங்களுக்காக புகழ்பெற்றது. முத்துப்பேட்டை நகரம் திருவாரூர் மாவட்டத்திலேயே மூன்றாவது பெரிய நகரமாக திகழ்கிறது. பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி நகரங்களுக்கு இடையே உள்ளது. முத்துப்பேட்டை நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,102 வீடுகளும் மற்றும் 41,722 மக்கள் தொகையும் கொண்டது.
நகராட்சியாக அறிவிக்க அனைத்து தகுதியும் அந்தஸ்தும் கொண்ட அடர்த்தியான நகரம் முத்துப்பேட்டை.