திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம்
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருத்துறைப்பூண்டியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 91,278 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 47,167 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 300 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]
• விளக்குடி • வேளுர் • வரம்பியம் • திருவலஞ்சுழி • திருத்தங்கூர் • சேகல் • இராயநல்லூர் • பூசலாங்குடி • பிச்சன்கோட்டகம் • பனையூர் • பாமணி • பளையங்குடி • நுணாக்காடு • நெடும்பலம் • மேட்டுப்பாளையம் • மேலமருதூர் • மணலி • குரும்பல் • கொத்தமங்கலம் • கொருக்கை • கோமல் • கொக்கலாடி • கீராலத்தூர் • கீரக்களுர் • கட்டிமேடு • கச்சனம் • குன்னூர் • எழிலூர் • ஆதிரெங்கம் • ஆண்டாங்கரை • அம்மனூர் • ஆலத்தம்பாடி
வெளி இணைப்புகள்
- திருவாரூர் மாவட்டத்தின் 10 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்