சுவாமிமலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சுவாமிமலை
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் கும்பகோணம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் பி. பிரியங்கா, இ. ஆ. ப [3]
பேரூராட்சி மன்றத் தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

7,289 (2011)

3,438/km2 (8,904/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

2.12 சதுர கிலோமீட்டர்கள் (0.82 sq mi)

55 மீட்டர்கள் (180 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/swamimalai


சுவாமிமலை (ஆங்கிலம்:Swamimalai) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் உள்ளது.

படிமம்:Swamimalaimuruga6.jpg
சுவாமிமலை முருகன் கோவில்.

அமைவிடம்

சுவாமிமலை பேரூராட்சி, கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

2.12 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 46 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,878 வீடுகளும், 7,289 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°57′35″N 79°19′57″E / 10.959600°N 79.332500°E / 10.959600; 79.332500 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக, 55 மீட்டர் (180 அடி) உயரத்தில் இருக்கின்றது.

அறுபடைவீடு

படிமம்:Swamimlai temple.JPG
ஆறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையின் தோற்றம்.

இங்கே உள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில், ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடு ஆகும். தாளமும், சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த அருணகிரிநாதர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் 4 ஆம் திருமுறையில் உள்ளன. இவ்வூரின் பிற பெயர்களில், திருவேரகம் என்பதும் ஒன்று. சுவாமிமலை வெண்கல சிலை வடித்தல் கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும்.[9]

திருப்புகழில், திருவேரகத்தில் உள்ள முருகனை அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகிறார்:

பாடல் 226

இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து ......அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் துறைவோனே... (வெற்பு = மலை)

சப்தஸ்தானம்

சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர்.[10]

மேற்கோள்கள்

  • திருப்புகழ், பகுதி-2, அருணகிரிநாதர், உரை டாக்டர் தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பத்திப்புக் கழகம், சென்னை-18. 1999.

சான்றுகள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. பேரூராட்சியின் இணையதளம்
  5. http://www.townpanchayat.in/swamimalai/population
  6. Swamimalai Population Census 2011
  7. Swamimalai Town Panchayat
  8. Falling Rain Genomics, Inc - Swamimalai
  9. திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)
  10. திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, 1992

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சுவாமிமலை&oldid=121601" இருந்து மீள்விக்கப்பட்டது