உத்தமபாளையம் வட்டம்
Jump to navigation
Jump to search
உத்தமபாளையம் வட்டம் , தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக உத்தமபாளையம் நகரம் உள்ளது. இவ்வட்டம் கம்பம், சின்னமனூர் மற்றும் கூடலூர் என மூன்று நகராட்சிகள் கொண்டது.
இந்த வட்டத்தின் கீழ் சின்னமனூர், கம்பம், உத்தமபாளையம், தேவாரம், மார்க்கையன்கோட்டை, எரசக்கநாயக்கனூர் என 6 உள்வட்டங்களும், 39 வருவாய் கிராமங்களும் உள்ளது. அவைகள்:
1.க.புதுப்பட்டி
4.கம்பம்
10.கருகட்டான் குளம்,சின்னமனூர்
16.குச்சனூர்
25.பண்ணைப்புரம்
27.பொட்டிபுரம்
30. சங்கராபுரம்
34.தேவாரம் மலை
38.வேப்பம்பட்டி
39. அழகாபுரி