போடிநாயக்கனூர் வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தென்காசியம்பதி வட்டம் , தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக தென்காசியம்பதி நகரம் உள்ளது. இவ்வட்டத்தில் தென்காசியம்பதி ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் போடிநாயக்கனூர், கோடாங்கிப்பட்டி, ராசிங்காபுரம் என 3 என உள்வட்டங்களும், 15 வருவாய் கிராமங்களும் உள்ளது.[1]அவைகள்:

  1. அகமலை
  2. பி.அம்மாபட்டி
  3. பி.மீனாட்சிபுரம்
  4. போடி மேற்கு மலைகள்
  5. போடிநாயக்கனூர் நகரம்
  6. போடி வடக்கு மலைகள்
  7. பூதிப்புரம்
  8. டொம்புச்சேரி
  9. கோடாங்கிபட்டி
  10. கூளையனூர்
  11. கொட்டகுடி
  12. மேலச்சொக்கநாதபுரம்
  13. ராசிங்காபுரம்
  14. சிலமலை
  15. உப்புக்கோட்டை

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 49,589 வீடுகளும், 180,789 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் 90,426 ஆண்களும்; 90,363 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில் 60.9% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 76.96% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16,930 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 946 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 29,974 மற்றும் 695 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.48%, இசுலாமியர்கள் 2.52%, கிறித்தவர்கள் 0.91 & பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=போடிநாயக்கனூர்_வட்டம்&oldid=128965" இருந்து மீள்விக்கப்பட்டது