சி. புதுப்பட்டி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சி. புதுப்பட்டி (ஆங்கிலம்:C. Pudupatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது தேனியிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு திராட்சை, தென்னை, வாழை ஆகியவை முக்கிய பயிராகும்.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 11,511 ஆகும். [1] இது 16.98 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 48 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [2]

ஆதாரங்கள்


"https://tamilar.wiki/index.php?title=சி._புதுப்பட்டி&oldid=118944" இருந்து மீள்விக்கப்பட்டது