உத்தமபாளையம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

உத்தமபாளையம் (ஆங்கிலம்:Uthamapalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இது தேனியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் தேனி - கம்பம் சாலையில் உள்ளது. உத்தமபாளையம் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 7,508 வீடுகளும், 29,050 மக்கள்தொகையும் கொண்டது.[1]

இது 9 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 121 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

பொருளாதாரம்

கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உத்தமபாளையம் பகுதி விவசாயச் செழிப்பு வாய்ந்த பகுதியாகும். இங்கு நெல், வாழை, கரும்பு ஆகியன பயிரிடப்படுகின்றன.

கோயில்

இந்த ஊரில் தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் காளாத்தீஸ்வரர் கோவில் உள்ளது.

கல்லூரிகள்

  • ஹாஜி கருத்த ராவுத்தர் கவுதியா கல்லூரி. இந்தக் கல்லூரியில் கவியரசு நா.காமராசன் பேராசிரியர் ஆக பணி புரிந்தார். இந்த கல்லூரியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பயின்றார்
  • தமிழ்நாடு அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி

சிறப்புக்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=உத்தமபாளையம்&oldid=111266" இருந்து மீள்விக்கப்பட்டது