தேனி வட்டம்
Jump to navigation
Jump to search
தேனி வட்டம் , தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக தேனி நகரம் உள்ளது. தேனி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் தேனி, கொடுவிலார்பட்டி என 2 உள்வட்டங்களும், 12 வருவாய் கிராமங்களும் உள்ளது. அவைகள்:
- அல்லிநகரம்
- கோவிந்தநகரம்
- ஜங்கால்பட்டி
- கொடுவிலார்பட்டி
- கோட்டூர்
- பூமலைக்குண்டு
- சீலையம்பட்டி
- தாடிச்சேரி
- தப்புக்குண்டு
- ஊஞ்சாம்பட்டி
- உப்பார்பட்டி
- வீரபாண்டி