கூடலூர் (தேனி)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கூடலூர் (தேனி)
கூடலூர் (தேனி)
இருப்பிடம்: கூடலூர் (தேனி)

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°41′N 77°16′E / 9.68°N 77.27°E / 9.68; 77.27Coordinates: 9°41′N 77°16′E / 9.68°N 77.27°E / 9.68; 77.27
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
வட்டம் உத்தமபாளையம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஆர். வி. ஷஜுவனா, இ. ஆ. ப [3]
நகர் மன்றத் தலைவர் பத்மாவதி லாேகந்துரை (2022-2027)
மக்கள் தொகை 41,915 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

கூடலூர், தேனி மாவட்டத்தில், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் இரண்டாம்நிலை நகராட்சி ஆகும். இது கம்பம் - குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.

நகராட்சி நிலை

1901ஆம் ஆண்டில் கிராமப் பஞ்சாயத்தாகத் தொடங்கப்பட்ட இந்த ஊர், 1952 ஆம் ஆண்டில் பேரூராட்சி நிலைக்குத் தரம் உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு அரசின்ஆணை (G.O.NO.270 of RD & LA Department RD & LA dated 11.06.04) மூலம் கடந்த 10-07-2004 முதல் மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு தற்போது இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்நகராட்சி, தேனியிலிருந்து குமுளி (கேரளா) செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்(NH-220)தமிழ்நாடு மற்றும் கேரளா|கேரளாவின் எல்லைப் பகுதியில் உள்ள நகராட்சி இது. இந்நகராட்சியில் மேலக்கூடலூர், கீழக்கூடலூர், லோயர்கேம்ப் என்கிற மூன்று ஊர்கள் இணைக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 12,001 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 41,915 ஆகும். அதில் 20,895 ஆண்களும், 21,020 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 72.6% மற்றும் பாலின விகிதம்ஆண்களுக்கு, 1,006 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 3355 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,769 மற்றும் 233 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.31%, இசுலாமியர்கள் 5.25% , கிறித்தவர்கள் 2.34% மற்றும் பிறர் 0.02% ஆகவுள்ளனர்.[4](2021 காெரானா காரணமாக கூடலூர் நகராட்சியில் மக்கள் தாெகை கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை, இருப்பினும் தாேராயமாக 56000 இருக்கலாம் என கணிக்கப்படுகிறது)

ஊரின் சிறப்பு

தமிழ்நாடும்,கேரளமும் கூடும் ஊரக எல்லையில் அமைந்து இருப்பதால் இவ்வூர் கூடலூர் என அழைக்கப்படுகிறது. கூடலூர் நகராட்சி மேற்குத்தாெடர்ச்சி மாலையின் அடிவாரத்தில் அமைந்து இருப்பதால் இயற்கையான சூழ்நிலையைப் பெற்றுள்ளது..

  • இங்கு முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் அவர்களுக்கு மணிமண்டபம் அமைந்துள்ளது.
  • சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஈஸ்வரன் காேவில்; விதைப்பண்ணை செல்லும் வழியில் தாமரைக்குளம் பகுதியில் அமைந்துள்ளது.இக்காேவிலை இந்த பகுதியை ஆண்ட பூஞ்சாறு தம்புரான் என்ற குறுநில மன்னன் கட்டினார் என கூறப்படுகிறது
  • கூடலூர் வனப்பகுதி பளியன்குடியில் இருந்து 6 கிலாே மீட்டர் தாெலைவில் மங்கள தேவி கண்ணகி காேவில் அமைந்துள்ளது.
  • பன்னீர் திராட்சை சாகுபடி அதிகம் இப்பகுதயில் செய்யப்படுகிறது.

அரசு அலுவகங்கள்

கூடலூர் to kG பட்டி,KM பட்டி செல்லும் சாலையில் கீழக்கூடலூர் பகுதியில் கூடலூர் தெற்கு காவல் நிலையம்,நகராட்சி அலுவலகம்,கிராம நிர்வாக அலுவலகம்,கால்நடை மருத்துவமணை,அரசு விதைப்பண்ணை ஆகியவை அமைந்துள்ளது.

பள்ளிகள்

  • என்.எஸ்.கே.பொன்னையாகவுண்டர் மேல்நிலைப்பள்ளி
  • ராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி
  • திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி
  • வ.உ.சி.நடுநிலைப்பள்ளி
  • இந்து நடுநிலைப்பள்ளி
  • பூங்கா அரசு நடுநிலைப்பள்ளி
  • அரசு கள்ளர் தாெடக்கப்பள்ளி
  • ஊ ஒ ஆரம்ப பள்ளி
  • காமட்சி அம்மன் தாெடக்கப்பள்ளி

வழிப்பாட்டு தளங்கள்

  • முருகன் காேவில்.(Nsk பெட்ராேல் பம்ப் to km பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.)
  • பகவதி அம்மன் காேவில்,வழிவிடு முருகன் காேவில்.(கூடலூர் to குமுளி செல்லும் பாதை.)
  • பள்ளிவாசல்(கிழக்கு மெயின் பஜாரில் அமைந்துள்ளது.)
  • C S I தேவாலயம்,Rc தேவாலயம் (கீழக்கூடலூர் 5 வார்டில் அமைந்துள்ளது.)

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. கூடலூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
"https://tamilar.wiki/index.php?title=கூடலூர்_(தேனி)&oldid=111225" இருந்து மீள்விக்கப்பட்டது