போடிநாயக்கனூர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
போடிநாயக்கனூர்
—  தேர்வு நிலை நகராட்சி  —
போடிநாயக்கனூர்
இருப்பிடம்: போடிநாயக்கனூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°01′N 77°21′E / 10.02°N 77.35°E / 10.02; 77.35Coordinates: 10°01′N 77°21′E / 10.02°N 77.35°E / 10.02; 77.35
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
வட்டம் போடி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
நகர்மன்றத் தலைவர்
சட்டமன்றத் தொகுதி போடிநாயக்கனூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக)

மக்கள் தொகை 75,675 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


353 மீட்டர்கள் (1,158 அடி)

குறியீடுகள்

போடிநாயக்கனூர் (ஆங்கிலம்: bodinayakanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தின், தென்காசியம்பதி வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

Transport Facility: போக்குவரத்து அமைப்புகள்:

  1. ℜ𝔞𝔧𝔞𝔱𝔥𝔞𝔫𝔦 𝔗𝔯𝔞𝔫𝔰𝔭𝔬𝔯𝔱 ℭ𝔬𝔯𝔭𝔬𝔯𝔞𝔱𝔦𝔬𝔫

𝔓𝔲𝔡𝔲𝔨𝔬𝔱𝔱𝔞𝔦 𝔏𝔦𝔪𝔦𝔱𝔢𝔡

ராஜதானி போக்குவரத்து கழகம் புதுக்கோட்டை மண்டலம்

  • கொத்தமங்கலம் தலைமை அலுவலகம் ,புதுக்கோட்டை மாவட்டம்.

rajathanitransportcorporation@gmail.com

  • போடிநாயக்கனூர் கிளை அலுவலகம் ,தேனி மாவட்டம்.

rajathanibs@gmail.com

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் Coordinates: Missing latitude
Invalid arguments have been passed to the {{#coordinates:}} function ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 353 மீட்டர் (1158 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வரலாறு

தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்ற போது, மதுரை மண்டலத்தை நிர்வகித்த விசுவநாத நாயக்கர், மதுரை மண்டலத்தை 72 பாளையங்களாகப் பிரித்தார். இந்த 72 பாளையங்களில் போடிநாயக்கனூர் பாளையமும் ஒன்றாக இருந்தது. போடிநாயக்கனூர் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 20,333 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 75,675 ஆகும். அதில் 37,498 ஆண்களும், 38,177 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 83.4% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,018பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6544 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,760 மற்றும் 21 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93%, இசுலாமியர்கள் 5.61%, கிறித்தவர்கள் 1.3% மற்றும் பிறர் 0.07% ஆகவுள்ளனர்.[4]

தொழில்

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில், மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட, 'ஏலக்காய் நகரம்' எனவும் அழைக்கப்படும் ஒரு நகராகும். இந்த நகரம் ஏலக்காய், காப்பி "குளம்பி", தேயிலை, பருத்தி விற்பனை செய்வதற்கான, விலை நிர்ணயிக்கக்கூடிய நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் ஏலக்காய் கடைகளுக்கும், காப்பி கடைகளுக்கும் (ஏலக்காய்/ காப்பி ) வேலைக்குச் செல்கின்றனர்.குறிப்பிட்ட அளவு மாங்காய் விவசாயம் நடைபெறுகிறது

குடிநீர்

போடிநாயக்கனூர் பகுதிக்குத் தேவையான குடிநீர் குரங்கணியில் உள்ள கொட்டகுடி ஆற்றிலிருந்து நீர், குழாய்களில் கொண்டு வரப்பட்டு, பரமசிவன் கோவில் மலையடிவாரத்தில் குடிநீராகப் பிரித்தெடுத்து/சுத்திகரிக்கப்பட்டு ஊருக்குள் வழங்கப்படுகிறது.நீர் பிடிப்புப் பகுதியில் இருந்து வீட்டிற்கு தண்ணீர் வரும் வரை மின்சாரம் செலவளிக்கப்படுவதில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். இப்பணியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

கோவில்கள்

  • இராமலிங்க சௌடம்மன் கோயில் 168 ஆண்டு பழமை உடையது, போடியில் தெற்கு ராஜவீதியில் அமையப்பெற்றுள்ளது. மேலும் கல்லால்லான மிக நேர்தியான முறையில் கட்டப்பட்ட பழமையான கோயிலாகும்
  • மேல சொக்கனாதர் கோயில்(சேரடிபாறை)
  • கிழ சொக்கனாதர் கோயில்(சேரடிபாறை)
  • விநாயகர் திருக்கோவில். (சந்தைபேட்டைப் பகுதியில் அமைந்துள்ள இக்கோவில் சுமார் 200 வருட பழமை வாய்ந்தது)
  • சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்.
  • ஸ்ரீ நிவாச பெருமாள் கோவில்.
  • ஸ்ரீ ஐயப்பன் கோவில்.
  • பராசக்தியம்மன் திருக்கோவில்.
  • பரமசிவன் மலைக்கோவில் (மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது)
  • குலாளர்பாளையம் காளியம்மன் கோயில்
  • ஸ்ரீமது இராமலிங்க சௌடம்மன் கோயில் (மேலத்தெரு)
  • ஸ்ரீமது இராமலிங்க சௌடம்மன் கோயில் (ஜக்கமன்நாயக்கன் பட்டி)
  • கருப்பசாமி கோயில்..(ஜக்கமன்நாயக்கன் பட்டி)
  • ஸ்ரீமது கொண்டரகி மல்லய சுவாமி கோயில் (பழைய பஸ் நிலையம்)
  • ஶ்ரீ செல்வ முத்து மாரியம்மன் கோவில் (சன்னாசிபுரம்)
  • சன்னாசிராயன் கோவில்

கல்விக்கூடங்கள்

  • ஜ.கா.நி.மேல்நிலைப்பள்ளி.
  • ஏழாவது பகுதி நகரவை மேல்நிலைப்பள்ளி.
  • பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
  • நாடார் மேல்நிலைப்பள்ளி.
  • சிசம் மெட்ரிக்குலேசன் பள்ளி.
  • ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி.*
  • தி ஸ்பைஸ் வேலி பப்ளிக் ஸ்கூல்(Cbse)
  • அரசினர் பொறியியல் கல்லூரி (GCE, Bodinayakanur)
  • Kamarajar Vidyasalai Matric Hr. Sec. School

காணவேண்டிய இடங்கள்

போடிநாயக்கனூர் (நகராட்சி) தேனியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. போடிநாயக்கனூர் 'போடி' என்று சுருக்கமாக அழைக்கபடுகிறது. இதனை அடுத்து 22 கி.மீ. தூரத்தில் உள்ள போடிமெட்டு என்னும் இடத்தில் இருந்து கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதி தொடங்குகிறது. மலைசூழ்ந்த இயற்கை அழகைக் கண்குளிர கண்டு மகிழலாம். போடிமெட்டில் இருந்து இரவு நேரத்தில் தேனிமாவட்டத்தின் பலபகுதிகள் மின்விளக்கு ஒளியில் மின்னுவது காணக்கிடைக்காத காட்சியாகும். போடியில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் போடிமெட்டுக்கு செல்லலாம். போடியில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு சுமார் 70 கி.மீ. தூரத்தில் உள்ளது.முந்தல் என்னும் சந்திப்பில் இருந்து போடிமெட்டு மற்றும் குரங்கணி ஆகிய இடங்களுக்கு பாதைகள் பிரிகின்றன. போடியில் பரமசிவன் கோவிலும்,விடா பாறை அருவி என்ற இரு இடங்கள் காணத் தகுந்தது.பரமசிவன் கோவில் போடி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து 7 நாட்கள், அரசு சார்பாக இந்த கோவிலின் திருவிழா கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "Bodinayakkanur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. போடிநாயக்கனூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்

வெளியிணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=போடிநாயக்கனூர்&oldid=110970" இருந்து மீள்விக்கப்பட்டது