சங்கரன்கோவில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சங்கரன்கோவில்
—  முதல் நிலை நகராட்சி  —
சங்கரன்கோவில்
இருப்பிடம்: சங்கரன்கோவில்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°10′N 77°33′E / 9.16°N 77.55°E / 9.16; 77.55Coordinates: 9°10′N 77°33′E / 9.16°N 77.55°E / 9.16; 77.55
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப
சட்டமன்றத் தொகுதி சங்கரன்கோவில்

-

சட்டமன்ற உறுப்பினர்

இ. ராஜா (திமுக)

மக்கள் தொகை 70,574
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


52 மீட்டர்கள் (171 அடி)

குறியீடுகள்
குறிப்புகள்
  • முதல் நிலை நகராட்சி
இணையதளம் www.sankarankovil.in

சங்கரன்கோவில் (Sankarankovil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி ஆகும். தென்காசி மாவட்டத்தில் தென்காசிக்கு அடுத்தபடியாக மாவட்டத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்றாக சங்கரன்கோவில் உள்ளது. சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் இங்கு பிரசித்தி பெற்றது. 108 சக்தி தலங்களில் ஒன்று. சங்கரன்கோயில் நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 70, 574 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சங்கரன்கோவில் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சங்கரன்கோவில் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

திருவிழாக்கள்

சங்கரநயினார் கோவில், சங்கரன்கோவில்
  1. சித்திரை பிரமோட்சவம்( நடராஜரின் ஆருத்ர தாண்டவம்) (10 நாட்கள்) ஒவ்வொரு சித்திரை (ஏப்ரல்/மே) மாதமும்
  2. அரியும் சிவனும் ஒன்றே என உணர்த்தும் வகையில் சங்கரநாராயணராக காட்சி தரும் ஆடித்தபசு திருவிழா (12 நாட்கள்) ஒவ்வொரு ஆடி (ஜூலை/ஆகஸ்டு) மாதமும்.
  3. ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா (10 நாட்கள்) ஒவ்வொரு ஐப்பசி (செப்டம்பர் /அக்டோபர்) மாதமும்
  4. தெப்பத் திருவிழா - தை கடைசி வெள்ளி ஒவ்வொரு தை (பிப்ரவரி) மாதமும் நடைபெற்று வருகிறது. இதில் ஆடி மாதம் நடைபெற்று வரும் தபசுத் திருவிழாவானது தனித்துவம் கொண்டதாகும்.
  5. பழமை வாய்ந்த அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில் பூக்குழி திருவிழா நடைபெறும்.
  6. சண்முகர் சன்னதியில் ஆறுமுக தீபாரதனையோடு 7 நாள்கள் கந்த சஷ்டி வைபவம் ( சூரசம்ஹாரம்) வெகுசிறப்பாக நடைபெறும்
  7. மார்கழி மாதமும் நடராஜர் ஆருத்ரா தரிசனம் செவ்வனே நடைபெறும்

வட்டார போக்குவரத்து நிலையம்

சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து நிலையம் 2013ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. சங்கரன்கோவிலின் வட்டார போக்குவரத்து நிலைய எண்: த.நா - 79 (TN - 79) ஆகும்.

கல்வி மாவட்டம்

சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு கல்வி மாவட்டம் செயல்படும் என்று 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு முன்னர் திருநெல்வேலி கல்வி மாவட்டத்தின் கீழ் சங்கரன்கோவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வருவாய் கோட்டம்

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து புதியதாக தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட இருந்த நிலையில் சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு வருவாய் கோட்டம் செயல்படும் என்று 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது. தற்போது தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள் உள்ளன.

நகராட்சி

சங்கரன்கோவில் நகராட்சியானது, தமிழகத்தில் உள்ள முதல் நிலை நகராட்சிகளில் ஒன்றாகும். மேலும், மாவட்டத்தில் தென்காசிக்கு அடுத்தபடியாகஉள்ள இரண்டாவது பெரிய நகரமாகும். சங்கரன்கோவில் நகராட்சியானது 2014-ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் சிறந்த நகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

தொழில்

சங்கரன்கோவில் நெசவு தொழிலுக்கு தனிச்சிறப்பு வாய்ந்தது. சங்கரன்கோவிலில் நாள் ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் மதிப்பிலான ஆடைகள் தயாரிக்கப்பட்டு பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.[சான்று தேவை] நெசவுத்தொழிலுக்கு அடுத்தபடியாக வேளாண் சார்ந்த தொழில் (விவசாயம்) சங்கரன்கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் முக்கிய தொழிலாக உள்ளது.

சங்கரன்கோவிலின் பிரபலங்கள்

  • எழுத்தாளர் - மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்
  • அ. பழநிச்சாமி முதலியார்- சங்கரன்கோவில் நகர தந்தை இன்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் முன்னாள் நகர் மன்ற தலைவர்.
  • கவிஞர் - சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் இவர் காவடிச் சிந்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
  • அரசியல்வாதி - திரு. வைகோ (மதிமுக கட்சியைத் தொடங்கியவர்)
  • அரசியல்வாதி - திரு. சொ. கருப்பசாமி (முன்னாள் அதிமுக அமைச்சர்) தற்சமயம் இறந்துவிட்டார்.
  • அரசியல்வாதி - திரு. ச. தங்கவேலு - (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) திமுக
  • திரைப்பட நடிகர் - சின்னக் கலைவாணர். விவேக் (நகைச்சுவை நடிகர்) (தோற்றம் - 19.11.1961 மறைவு - 17.04.2021)
  • திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் - எஸ். ஜே. சூர்யா (அருகிலுள்ள வாசுதேவநல்லூர்)
  • அரசியல்வாதி - திருமதி. வி. எம். ராஜலட்சுமி - முன்னாள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் (அதிமுக)

செவ்வாடு

இந்த வட்டத்திற்கு உட்பட்ட மேலநீலிதநல்லூர் மற்றும் கீழநீலிதநல்லூர் பகுதியில் வளர்க்கப்படும் செவ்வாடுகள் உடற்கூறு மற்றும் மரபு அமைப்பின்படி சர்வதேச அங்கீகாரம் பெற்று விளங்குகிறது.[4]

சந்தை

சங்கரன்கோவிலில் மூன்று சந்தைகள் உள்ளன. அதில் முதன்மையான காய்கறிச் சந்தை சங்கரன்கோவில் பழைய நகராட்சி அலுவலகம் மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகிலும் உள்ள காந்தி நூற்றாண்டு நினைவு தினசரி காய்கறிச் சந்தையாகும். இச்சந்தையில் 70க்கும் மேற்பட்ட அங்காடிகள் உள்ளன. மற்றொரு முக்கியமான சந்தை உழவர் சந்தை ஆகும். உழவர் சந்தையின் வேலை நேரம்: காலை 06.00 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே இருக்கும். உழவர் சந்தை சங்கரன்கோவில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு எதிரே அமைந்துள்ளது. மேலும் சங்கரநாராயணர் திருக்கோயில் அருகே உள்ள வளாகத்தில் ஒரு மலர்ச்சந்தையும் உள்ளது. தென்மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை மலர்சந்தைக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய மலர்சந்தை சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது. இச்சந்தையிலிந்து மலர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், கேரளாவிற்கும், மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வங்கிகள்

  • பாரத ஸ்டேட் வங்கி
  • கரூர் வைஸ்யா வங்கி
  • ஐசிஐசிஐ வங்கி
  • ஆக்ஸிஸ் வங்கி
  • எச்.டி.எப்.சி வங்கி
  • சின்டிகேட் வங்கி
  • எக்விடாஸ் வங்கி
  • உஜ்ஜிவன் வங்கி
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
  • ஸ்டேட் வங்கி ஆப் திருவாங்கூர்
  • பாண்டியன் கிராம வங்கி
  • கனரா வங்கி
  • ஐடிபிஐ வங்கி
  • ஆந்திரா வங்கி
  • கார்ப்பரேஷன் வங்கி
  • இந்தியன் வங்கி
  • தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி
  • சிட்டி யூனியன் வங்கி
  • கும்பகோணம் பரஸ்பர நிதி பி.லிட்
  • போர்ட் சிட்டி பெனிபிட் நிதி பி.லிட்

போக்குவரத்து

தொடருந்து போக்குவரத்து

சங்கரன்கோவிலின் புறநகர் பகுதியில் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.

சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் ஆறு இர‌யி‌ல்கள் வந்து செல்லும் . அதில் மூன்று மதுரை முதல் செங்கோட்டை வரை மற்ற மூன்று செங்கோட்டை முதல் மதுரை வரையாகும். மேலும், சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் இரண்டு விரைவு இர‌யி‌ல் வந்து செல்லும். அதில் ஒன்று சென்னை முதல் செங்கோட்டை வரை பிரிதொன்று செங்கோட்டை முதல் சென்னை வரையாகும்.

தொடருந்து

  1. சென்னை‍‍- செங்கோட்டை- சென்னை பொதிகை அதிவிரைவு வண்டி தினமும் உண்டு.
  2. சிலம்பு விரைவு வண்டி (செங்கோட்டை-சென்னை-செங்கோட்டை)
  3. சென்னை - கொல்லம் தினசரி விரைவுத் தொடர்வண்டி
  4. மதுரையிலிருந்து (வழி - விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில்சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை) வரையான பயணிகள் ரயில் தினசரி காலை, மாலை என இருவேளைகளிலும் இயக்கப்படுகிறது.

பேருந்துப் போக்குவரத்து

சங்கரன்கோவிலில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. பழைய பேருந்து நிலையத்தின் பெயர்: அண்ணா பேருந்து நிலையம். புதிய பேருந்து நிலையத்தின் பெயர்: தந்தை பெரியார் புதிய பேருந்து நிலையம். புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாடில் உள்ளது. ஏனெனில், பழைய பேருந்து நிலையமானது மறுசீரமைப்பு பணியில் உள்ளது. இன்னும் சில மாதங்களில் பழைய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலைகளான 41 மற்றும் 71 ஆகிய இரு பெரும் நெடுஞ்சாலையின் மத்தியில் அமைந்துள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளான 7 மற்றும் 208 ஆகியவை மிகவும் அருகில் அமைந்துள்ளது. ஆகையால் தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வசதி உள்ளது.

சங்கரன்கோவிலிருந்து திருநெல்வேலி, தென்காசி,கோவில்பட்டி, இராஜபாளையம், ஶ்ரீவில்லிப்புத்தூர்,மதுரை, சிவகாசி, தேனி, குமுளி, தூத்துக்குடி, புளியங்குடி,சுரண்டை,ஆலங்குளம்,நாகர்கோவில்,மார்த்தாண்டம்,திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், பாபநாசம், செங்கோட்டை, போடி, விருதுநகர், திருச்சி, திருப்பூர், சென்னை, கோயம்புத்தூர்,மேட்டுப்பாளையம்,பழனி, பொள்ளாச்சி, ஊட்டி என தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்ல நேரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் உள்ளன. கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம், கோட்டயம்,ஆலப்புழா,புனலூர் போன்ற முக்கிய நகரங்களுக்குச் செல்ல விரும்பினால் தென்காசி சென்று செல்லலாம். கேரள மாநிலம் மூணார்,பாலக்காடு, கோழிக்கோடு,மலப்புரம் செல்ல நேரடி பேருந்து வசதி உள்ளது.பெங்களூரு, பாண்டிச்சேரி போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளது.

கல்வி நிறுவனங்கள்

  • செங்குந்தர் நடுநிலைப்பள்ளி, சங்கரன்கோவில்
  • 24 மனை தெலுங்கு செட்டியார் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • ஏ. வி. கே இண்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி (சி.பி.எஸ்.இ), சங்கரன்கோவில்.
  • ஏ.வி.கே மெமோரியல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • வேல்ஸ் பப்ளிக் பள்ளி (சி.பி.எஸ்.இ), சங்கரன்கோவில்.
  • ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • ஸ்ரீ மகாலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • ஸ்ரீ கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சங்கரன்கோவில்.
  • ஸ்ரீ கோமதி அம்பாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சங்கரன்கோவில்.
  • சி.நா.ராமசாமி ராஜா(எஸ். என். ஆர்) மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • ஏ.வி.மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • 36 கிராம சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • வணிக வைசிய சங்க மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • சிவா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சங்கரன்கோவில்.
  • இராயல் சிட்டி மார்டன் ஆங்கிலப் பள்ளி, சங்கரன்கோவில்.
  • இராமச்சந்திரா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சங்கரன்கோவில்.
  • நகராட்சி (முனிசிபல்) பள்ளி (மொத்தம் - 15 +)
  • செவென்த்டே அட்வன்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி , சங்கரன்கோவில்.
  • அன்னை தெரசா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சங்கரன்கோவில்.
  • ஜெய மாதா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சங்கரன்கோவில்.
  • சங்கரநாராயணா பிளே பள்ளி, சங்கரன்கோவில்.
  • சங்கரநாராயணர் ஆரம்ப பாடசாலை, சங்கரன்கோவில்.
  • செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • கோமதி சங்கர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சங்கரன்கோவில்.
  • இமாம் கஸாலி (ரஹ்) ஓரியண்டல் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்-சங்கரன்கோவில்.
  • வணிக வைசிய சங்க உயர் நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)
  4. உடற்கூறு, மரபு அமைப்பில் தனித்துவம்: சர்வதேச அங்கீகாரம் பெற்ற திருநெல்வேலி ‘செவ்வாடு’ தி இந்து தமிழ் நவம்பர் 6 2016
"https://tamilar.wiki/index.php?title=சங்கரன்கோவில்&oldid=113553" இருந்து மீள்விக்கப்பட்டது