தென்காசி மாவட்டம்
தென்காசி | |
மாவட்டம் | |
குற்றால அருவி | |
தென்காசி மாவட்டம்:அமைந்துள்ள இடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைநகரம் | தென்காசி |
பகுதி | தென் மாவட்டம் |
ஆட்சியர் |
திரு. ப. ஆகாஷ், இ. ஆ. ப |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
திரு. ஆர். கிருஷ்ணராஜ், இ. கா. ப |
நகராட்சிகள் | 6 |
வருவாய் கோட்டங்கள் | 2 |
வருவாய் வட்டங்கள் | 8 |
பேரூராட்சிகள் | 17 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 10 |
கிராம ஊராட்சிகள் | 221 |
வருவாய் கிராமங்கள் | 246 |
சட்டமன்றத் தொகுதிகள் | 5 |
மக்களவைத் தொகுதிகள் | 1 |
பரப்பளவு | 2882.43 ச.கி.மீ |
மக்கள் தொகை |
33,22,644 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
627 811 |
தொலைபேசிக் குறியீடு |
04633 (TSI) & 04636 (SNKL) |
வாகனப் பதிவு |
TN 76 மற்றும் TN 79 |
இணையதளம் | tenkasi |
தென்காசி மாவட்டம் (Tenkasi district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தென்காசி நகரம் ஆகும். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சில பகுதிகளைக் கொண்டு தென்காசி மாவட்டம் நிறுவுவதற்கு 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மேற்கே கேரள மாநிலத்தையும், கிழக்கே தூத்துக்குடி மாவட்டத்தையும், வடக்கே விருதுநகர் மாவட்டத்தையும், தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது. [1][2] புதிய இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக, திரு. ஜி.கே. அருண் சுந்தர் தயாளன், இ.ஆ.ப., நியமிக்கப்பட்டார்.[3] 22 நவம்பர் 2019 அன்று இம்மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை தமிழக முதல்வர், எடப்பாடி க. பழனிசாமி முறைப்படி துவக்கி வைத்தார்.[4][5]
மாவட்ட வருவாய் நிர்வாகம்
இம்மாவட்டம் தென்காசி வருவாய் கோட்டம் மற்றும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும், 30 குறுவட்டங்களும், 246 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.[6]
வருவாய்க் கோட்டங்கள்
வருவாய் வட்டங்கள்
- சங்கரன்கோயில் வட்டம்
- தென்காசி வட்டம்
- கடையநல்லூர் வட்டம்
- ஆலங்குளம் வட்டம்
- சிவகிரி வட்டம்
- செங்கோட்டை வட்டம்
- வீரகேரளம்புதூர் வட்டம்
- திருவேங்கடம் வட்டம்
உள்ளாட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகள்
இம்மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள்,[7] ஊராட்சி நிர்வாக அமைப்புகளில் 10 ஊராட்சி ஒன்றியங்கள், 221 கிராம ஊராட்சிகள் உள்ளது.[8]
நகராட்சிகள்
- தென்காசி (முதல் நிலை நகராட்சி)
- சங்கரன்கோவில் (முதல் நிலை நகராட்சி)
- கடையநல்லூர் (முதல் நிலை நகராட்சி)
- புளியங்குடி (இரண்டாம் நிலை நகராட்சி)
- செங்கோட்டை (இரண்டாம் நிலை நகராட்சி)
- சுரண்டை
பேரூராட்சிகள்
- அச்சன்புதூர்
- ஆலங்குளம்
- ஆய்க்குடி
- இலஞ்சி
- குற்றாலம்
- கீழப்பாவூர்
- மேலகரம்
- பண்பொழி
- இராயகிரி
- சாம்பவர் வடகரை
- சுந்தரபாண்டிபுரம்
- வடகரை கீழ்படுகை
- வாசுதேவநல்லூர்
- சிவகிரி
- திருவேங்கடம்
- ஆழ்வார்குறிச்சி
- புதூர் (செங்கோட்டை)
ஊராட்சி ஒன்றியங்கள்
தென்காசிமாவட்டம் பின்வரும் 10 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது.
அரசியல்
தென்காசி மாவட்டம், ஒரு மக்களவைத் தொகுதியும் மற்றும் 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.
நாடாளுமன்றத் தொகுதிகள்
சட்டமன்றத் தொகுதிகள்
- தென்காசி (சட்டமன்றத் தொகுதி)
- சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி) (தனி)
- கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)
- வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) (தனி)
- ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)
ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத் தலங்கள்
- தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்
- சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்
- குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
- இலஞ்சி குமாரர் கோயில்
- பண்பொழி திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில்
- குற்றாலம் அருவிகள்
- புளியங்குடி நரசிங்க பெருமாள் கோயில்
- புளியங்குடி பாலசுப்பிரமணியசுவாமி கோவில்
- வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில்
- இலத்தூர் சனீஸ்வரன் ஆலயம்
- புளியரை தட்சிணாமுர்த்தி ஆலயம்
- வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாதர் திருக்கோவில்
- தென்காசி ஸையது சுலைமான் தர்கா
- பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் தர்கா
- கடையம் தோரணமலை முருகன் கோவில்
- கம்பிளி கிராமம் மகாலிங்க மலை சிவன் கோவில்
- ஆய்க்குடி சிவன் கோவில்
- ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
- கம்பிளி கிராமம் சூரியகாந்தி தோட்டம் (குற்றால சீசன் காலங்களில்)
- ஆய்க்குடி ஏகாம்பரேஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவில்
தென்பாண்டி நாட்டின் ஐம்பூத தலங்கள்
- சங்கரன்கோவில் - சங்கரன்கோயில் சங்கரநாராயணர் கோயில் - நிலம் தலம் (பிரித்வி)
- தாருகாபுரம் - அருள்மிகு மத்தியஸ்த நாதர் கோயில் - நீர் தலம் (அப்பு)
- கரிவலம்வந்தநல்லூர் - அருள்மிகு பால்வண்ணநாதர் கோயில் - நெருப்பு தலம் (தேயு)
- தென்மலை - அருள்மிகு திருபுரநாதேஸ்வரர் கோயில் - காற்று தலம் (வாயு)
சிறப்புக்கள் - தமிழின் தோற்றம்
தமிழ் மொழியானது, பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி, சிவன் பாணினியையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார்.
குற்றாலம்
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் குற்றாலம் நகரும் ஒன்று. குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. இங்கு குளித்து மகிழ இயற்கையாக அமைந்த அருவிகளான பேரருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, பேரருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி என்று பல நீர்விழ்ச்சிகள் உள்ளன. இங்கு குளிப்பதால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கிறது என்று 1811-ஆம் ஆண்டில் ஆங்கில ஆட்சியாளர்களான கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் அனுப்பிய மருத்துவ குழுவினர் தங்களது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர். தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன. இந்த மூலிகைச் செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் இதில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளது என்கிறார்கள்.
இங்கு சூன், சூலை, ஆகத்து மாதங்களில், அருவிகளில் குளிக்க திரளான மக்கள் கூடுவர். சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத துவக்கத்திலே அருவிகளில் நீர் கொட்ட துவங்கிவிடும்.
குற்றாலத்தில் பல அருவிகள் உள்ளன. அதில் மிகவும் ஆபத்தானது தேனருவி, இங்கு தேன்கூடுகள் பல உள்ளதால் இப்பெயர் பெற்றுள்ளது. இங்கிருந்து இரண்டரை கி.மீ. கீழே செண்பகா தேவி அருவி உள்ளது. இங்கு செண்பகா தேவியம்மன் ஆலயம் இருக்கிறது.
தமிழகத்தில் நடராஜர் நடனமாடிய 5 சபைகளில் திருகுற்றாலநாதர் ஆலயம் சித்திர சபை என்று அழைக்கப்படுகிறது. இங்கு குறுமுனி என்றழைக்கப்பட்ட தமிழ் மாமுனிவர் அகத்தியர் வழிபட்ட குற்றாலம் குற்றாலநாதர் கோயில் சன்னதி உள்ளது.
பூலித்தேவன் நினைவகம்
ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முதன்முதலாக போர் முரசு கொட்டியவர் மாவீரன் பூலித்தேவன். 1715-ஆம் ஆண்டு பிறந்த பூலித்தேவன், 1755-ஆம் ஆண்டு ஆங்கிலத் தளபதி ஆரோனுக்கு வரி தர மறுத்து சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கினார். தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை புறமுதுகு காட்டச் செய்தார். இத்தகைய மாவீரரை சங்கரன்கோயிலில் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த போது வஞ்சகமாகக் பிடிக்க சுற்றி வளைத்தது ஆங்கிலேயப் படை. ஆனால் அவரோ அங்குள்ள குகை ஒன்றினுள் போனார். எதிரிகளிடம் சிக்கவும் இல்லை. என்ன ஆனார் என்று தெரியவும் இல்லை. இந்த மாவீரனுக்கென்று சிவகிரி வட்டம், புளியங்குடி வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்சேவலில் ஒரு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற உணவுகள்
கடையநல்லூர் அருகில் உள்ள சொக்கம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தனியார் இனிப்பகமும், சங்கரன்கோவில் கீழரத வீதியில் உள்ள தனியார் அல்வா கடையும் அல்வாவிற்கு பெயர் போனவை.
இதேபோல், செங்கோட்டை அருகில் உள்ள பிரானூர் பார்டர் புரோட்டாவும், புளியங்குடி மெயின் ரோட்டில் உள்ள தனியார் உணவக புரோட்டாவும், இந்திய அளவில் சுற்றுலா பயணிகள் மத்தியில் சிறப்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் சங்கரன்கோவில் பகுதியில் இந்த வகை ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பெயர் பெற்றது. இங்குள்ள ஆடுகளின் வளர்ப்பும் அரிசியின் தரமும், இதன் சிறப்புகளாக உள்ளன. தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் வளர்க்கப்படும் கன்னி என்ற வகையைச் சேர்ந்த ஆடுகள் சுவையில் சிறந்தவை. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமே அல்லாமல் வெளி ஊர் மற்றும் வெளிமாநில மக்களின் நல்லாதரவைப் பெற்றது.
செவ்வாடு
இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட மேலநீலிதநல்லூர், மானூர், பாப்பாகுடி, ஆலங்குளம், நாங்குநேரி,மற்றும் பாளையங்கோட்டை போன்ற பகுதியில் வளர்க்கப்படும் செவ்வாடுகள் உடற்கூறு மற்றும் மரபு அமைப்பின்படி சர்வதேச அங்கீகாரம் பெற்று விளங்குகிறது. இவற்றுள் அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு என இவை இரண்டுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கங்கள்
- இராமநதி
- கடனாநதி
- குண்டாறு
- அடவிநயினார்
- கருப்பாநதி
- மோட்டை
- செண்பகவல்லி அணை
- ஶ்ரீ மூலப்பெரி அணை
அருவிகள்
- பழத்தோட்டம் அருவி (சிறப்பு அனுமதி பெற்றவர்களுக்கு மட்டும்)
- எருமைசாவடி அருவி (தனியார்)
- தேன் அருவி (வனப்பகுதி)
- பேரருவி
- பழைய குற்றால அருவி
- சிற்றருவி
- ஐந்தருவி
- புலியருவி
- சின்ன குற்றாலம் முந்தல் அருவி (புளியங்குடி)
- தலையணை தீர்த்தபாறை அருவி (வாசுதேவநல்லூர்)
- செண்பகாதேவி அருவி என 11 அருவிகளைக் கொண்டது
நதிகள்
- சிற்றாறு
- குண்டாறு நதி
- ஹரிஹர நதி
- கல்லாறு
- நிட்சேபநதி
- அனுமன் நதி
- ஆகிய நதிகளின்
- வாழைமலை ஆறு
- கோட்டைமலை ஆறு
பிறப்பிடமாக தென்காசி மாவட்டம் விளங்குகிறது
மாவட்ட ஆட்சித்தலைவர்கள்
NO | பெயர் | தொடக்கம் | முடிவு |
---|---|---|---|
1 | திரு. G.K.அருண் சுந்தர் தயாளன், இ.ஆ.ப. | 22-11-2019 | 15-11-2020 |
2 | மரு. G.S.சமீரன், இ.ஆ.ப. | 15-11-2020 | 15-06-2021 |
3 | திரு. S.கோபால சுந்தர்ராஜ், இ.ஆ.ப. | 16-06-2021 | 12-06-2022 |
4 | திரு. P. ஆகாஷ், இ.ஆ.ப. | 13-06-2022 |
மேற்கோள்கள்
- ↑ https://www.dinamani.com/tamilnadu/2019/nov/14/புதிய-மாவட்டங்களின்-எல்லைகள்-வரையறை-அரசாணை-வெளியீடு-3279030.html புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு]
- ↑ தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
- ↑ புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நியமனம்
- ↑ "தமிழகத்தின் 33-ஆவது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்". Archived from the original on 2019-12-20. பார்க்கப்பட்ட நாள் 2019-11-22.
- ↑ தென்காசி புதிய மாவட்டம் தொடக்க விழா
- ↑ Tenkashi District-Revenue Administration
- ↑ Tenkashi District-Local Bodies Administration
- ↑ Tenkashi District-Development Administration
வெளி இணைப்புகள்
- தென்காசி மாவட்டம்: 17 ஆகஸ்டு 2019 அன்று கருத்துக் கேட்பு கூட்டம்
- 33 ஆண்டுக்கு பின் உருவானது தென்காசி மாவட்டம்|ஒன் இந்தியா செய்தி