தென்மலை, வாசுதேவநல்லூர்
தென்மலை (Thenmalai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், தென்மலை ஊராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்த கிராமம் ஆகும். இது வருவாய் வட்டத் தலைமையிடமான வாசுதேவநல்லூரிலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும், கரிவலம்வந்தநல்லூரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 627 757 ஆகும். இவ்வூரில் புகழ்பெற்ற பரிகாரத் தலமான தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மேலும் தென்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோயிலும் அமைந்துள்ளது. தென்மலை கிராமம், வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
அருகமைந்த சிற்றூர்கள்
- அ.சுப்ரமணியபுரம்
- அருகன்குளம்
- செந்தட்டியாபுரம்புதூர்
அருகமைந்த நகரங்கள்
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 3060 வீடுகள் கொண்ட தென்மலை ஊராட்சியின் மொத்த மக்கள் தொகை 10,283 ஆகும். அதில் ஆண்கள் 49.5% மற்றும் பெண்கள் 51.5% ஆகவுள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1002 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 65.4% ஆகும்.
கல்வி நிலையங்கள்
- வெள்ளை விநாயகர் துவக்கப் பள்ளி
- விக்டோரியா துவக்கப் பள்ளி
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
- இந்து நடுநிலைப் பள்ளி
வழிபாட்டுத் தலங்கள்
மேற்கோள்கள்
- ↑ Thenmalai
- ↑ "பகைவர் பயம் போக்கும் தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோவில்". Archived from the original on 2021-10-02. பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.