திருவேங்கடம்
திருவேங்கடம் பேரூராட்சி | |
— நகரம் — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
வட்டம் | திருவேங்கடம் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | |
பேரூராட்சி மன்றத் தலைவர் | வெற்றிடம் |
மக்கள் தொகை • அடர்த்தி |
8,337 (2011[update]) • 534/km2 (1,383/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 15.60 சதுர கிலோமீட்டர்கள் (6.02 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/thiruvengadam |
திருவேங்கடம் (Thiruvengadam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சங்கரன்கோவில் வட்டத்தை பிரித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திருவேங்கடம் வட்டம் உருவாக்கப்பட்டது.
அமைவிடம்
இப்பேரூராட்சி திருநெல்வேலியிலிருந்து 80 கிமீ தொலைவிலும்; கோவில்பட்டியிலிருந்து 25 கிமீ தொலைவிலும்; சங்கரன்கோவிலிருந்து 18 கிமீ தொலைவிலும்; சிவகாசியிலிருந்து 28 கிமீ தொலைவிலும் உள்ளது. சங்கரன்கோவில் இதன் அருகமைந்த தொடருந்து நிலையம் ஆகும்.
பேரூராட்சியின் அமைப்பு
15.60 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2368 வீடுகளும், 8337 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
ஆறுகள்
திருவேங்கடம் ஊரில் நிட்சேப நதி (வைப்பாறு )பாய்கிறது. இவ்வாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு அந்த நீர் கீழத்திருவேங்கடத்தின் கூத்தாடி குளத்துக்கு கால்வாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
வழிபாட்டுத் தலங்கள்
- யோக ஆஞ்சநேயர் திருக்கோவில்(சங்குபட்டி விலக்கு,நரிபாறை)
- அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ( மதாங்கோவில்)
- மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில் (சிவன் கோவில்)
- திருவேங்கடநாதர் கோவில்
- படிக்காசு விநாயகர் கோவில்
- காளியம்மன் கோவில்
- முப்பிடாரி அம்மன் கோவில்
- வனப்பேச்சியம்மன் கோவில
- அய்யனார் கோவில்.
கல்வி நிலையங்கள்
- ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
- சி.எஸ்.ஐ துவக்கப்பள்ளி
- அரசு மேல்நிலைப் பள்ளிகள் (தமிழ் & ஆங்கிலம் பயிற்று மொழிகள்)
தனியார் பள்ளிகள் (ஆங்கில வழி மட்டும்)
- ஸ்ரீ கலைவாணி மெட்ரிகுலேசன் பள்ளி
- கெங்குசாமி நாயுடு மெட்ரிகுலேசன் பள்ளி
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "திருவேங்கடம் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-20.
- ↑ "திருவேங்கடம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2020-02-20. பார்க்கப்பட்ட நாள் 2019-03-20.
- ↑ Thiruvenkadam Population Census 2011