தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
(தமிழக மாவட்டங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தமிழக மாவட்டங்கள்
Tamil Nadu map (Tamil).png
வகைமாவட்டங்கள்
அமைவிடம்தமிழ்நாடு
எண்ணிக்கை38 மாவட்டங்கள்
மக்கள்தொகைபெரம்பலூர் – 565,223 (குறைவு); சென்னை – 4,646,732 (அதிகம்)
பரப்புகள்426 km2 (164 sq mi) சென்னை (சிறியது)  – 6,266.64 km2 (2,419.56 sq mi) திண்டுக்கல் (பெரியது)
அரசுதமிழ்நாடு அரசு
உட்பிரிவுகள்தாலுகாக்கள், வருவாய் கிராமங்கள்

இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர் மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழ்நாட்டின் தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.

வரலாறு

தமிழ்நாட்டின் மாவட்டங்களின் பிரிவினை விவரிக்கும் அசைபடம் 1956 முதல் 2009 வரை
இந்திய வரைபடத்தில் உள்ள தமிழ்நாடு மாநிலம்

1947 ஆகத்து மாதம் இந்திய விடுதலை பெற்ற பின்னர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணமானது, சென்னை மாநிலம் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1953 முதல் 1956 வரையிலான மாநில எல்லைகள் சீரமைப்புகளின் வாயிலாக தற்போதைய எல்லைகள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநிலமானது, 1969ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக, தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது. முந்தைய சென்னை மாகாணமானது 13 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை: செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மெட்ராஸ், மதுரை, நீலகிரி, வட ஆற்காடு, இராமநாதபுரம், சேலம், தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகியனவாகும். இம்மாவட்டங்கள் கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டு, தற்போதைய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.[1]

மாவட்டங்கள் பட்டியல்

மண்டல வாரியாக

அட்டவணை

2011 ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கட் தொகை 7,21,38,958 ஆகும். இதில் அதிக மக்கள்தொகை உள்ள மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 46,81,087 பேர் வசித்து வருகின்றனர். இம்மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி ஒரு ச.கி.மீ.க்கு 26,903 ஆக இருக்கிறது. மாநிலத்தின் மக்கள் அடர்த்தி மிகக் குறைவாக உள்ள மாவட்டம், நீலகிரி மாவட்டம் ஆகும் (ஒரு ச.கி.மீ.க்கு 288 பேர்). கல்வியறிவில் கன்னியாகுமரி மாவட்டம் முதன்மையாக உள்ளது. இங்கு மாவட்டத்தின் 92.14% பேர் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். கல்வியறிவில் 64.71% பெற்று, தருமபுரி மாவட்டம் கடைசி நிலையில் உள்ளது.[7] கீழே உள்ள அட்டவணையில், அனைத்து 38 மாவட்டங்களுக்கான புவியியல் மற்றும் மக்கட்தொகை அளவுருக்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.[8]

எண். மாவட்டம் குறியீடு தலைநகரம் நிறுவப்பட்டது முந்தைய மாவட்டம் பரப்பளவு (கி.மீ²) மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி) தாலுகா/வட்டம்[9] வரைபடம்
மக்கள் தொகை[10] மக்கள் தொகை அடர்த்தி (/கி.மீ²)
1. அரியலூர் AR அரியலூர் 23 நவம்பர் 2007 பெரம்பலூர் 1949.31 7,54,894 390 Ariyalur in Tamil Nadu (India).svg.png
2. செங்கல்பட்டு CGL செங்கல்பட்டு 29 நவம்பர் 2019 காஞ்சிபுரம் 2,944.96 2,556,244 868
3. சென்னை CH சென்னை 1 நவம்பர் 1956 ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று 426 4,646,732 26,076 Chennai in Tamil Nadu (India).svg.png
4. கோயம்புத்தூர் CO கோயம்புத்தூர் 1 நவம்பர் 1956 ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று 4,723[11] 3,458,045 732 Coimbatore in Tamil Nadu (India).svg.png
5. கடலூர் CU கடலூர் 30 செப்டம்பர் 1993 தென் ஆற்காடு 3,678 2,605,914 709 Cuddalore in Tamil Nadu (India).svg.png
6. தருமபுரி DH தருமபுரி 2 அக்டோபர் 1965 சேலம் 4,497.77 15,06,843 335 Dharmapuri in Tamil Nadu (India).svg.png
7. திண்டுக்கல் DI திண்டுக்கல் 15 செப்டம்பர் 1985 மதுரை 6,266.64 21,59,775 345 Dindigul in Tamil Nadu (India).svg.png
8. ஈரோடு ER ஈரோடு 31 ஆகத்து 1979 கோயம்புத்தூர் 5,722[12] 22,51,744 394 Erode in Tamil Nadu (India).svg.png
9. கள்ளக்குறிச்சி KL கள்ளக்குறிச்சி 26 நவம்பர் 2019 விழுப்புரம் 3,520.37 13,70,281 389 Kallakurichi in Tamil Nadu (India).svg.png
10. காஞ்சிபுரம் KC காஞ்சிபுரம் 1 சூலை 1997 செங்கல்பட்டு (சென்னை மாகாணம்) 1,655.94 11,66,401 704 Kanchipuram in Tamil Nadu (India).svg.png
11. கன்னியாகுமரி KK நாகர்கோவில் 1 நவம்பர் 1956 ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று 1,672 18,70,374 1,119 Kanyakumari in Tamil Nadu (India).svg.png
12. கரூர் KR கரூர் 30 செப்டம்பர் 1995 திருச்சிராப்பள்ளி 2,895.57 10,64,493 357 India Tamil Nadu districts Karur.svg.png
13. கிருட்டிணகிரி KR கிருட்டிணகிரி 9 பிப்ரவரி 2004 தருமபுரி 5,143 18,79,809 366 India Tamil Nadu districts Krishnagiri.svg.png
14. மதுரை MDU மதுரை 1 நவம்பர் 1956 ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று 3,741.73 30,38,252 812 India Tamil Nadu districts Madurai.svg.png
15. மயிலாடுதுறை மயிலாடுதுறை 7 ஏப்ரல் 2020 நாகப்பட்டினம் 1,172 9,18,356 784 Mayiladuthurai in Tamil Nadu (India).svg.png
16. நாகப்பட்டினம் NG நாகப்பட்டினம் 18 அக்டோபர் 1991 தஞ்சாவூர் 1,397 6,97,069 498 India Tamil Nadu districts Nagapattinam.svg.png
17. நாமக்கல் NM நாமக்கல் 1 சனவரி 1997 சேலம் 3,363 17,26,601 513 India Tamil Nadu districts Namakkal.svg.png
18. நீலகிரி NI உதகமண்டலம் 1 நவம்பர் 1956 ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று 2,452.5 7,35,394 300 India Tamil Nadu districts Nilgiris.svg.png
19. பெரம்பலூர் PE பெரம்பலூர் 30 செப்டம்பர் 1995 திருச்சிராப்பள்ளி 1,752 5,65,223 320 India Tamil Nadu districts Perambalur.svg.png
20. புதுக்கோட்டை PU புதுக்கோட்டை 14 சனவரி 1974 தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி 4,663 16,18,345 347 Pudukottai in Tamil Nadu (India).svg.png
21. இராமநாதபுரம் RA இராமநாதபுரம் 1 நவம்பர் 1956 ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று 4,089.57 13,53,445 331 India Tamil Nadu districts Ramanathapuram.svg.png
22. இராணிப்பேட்டை RN இராணிப்பேட்டை 28 நவம்பர் 2019 வேலூர் 2,234.32 12,10,277 542 Ranipet in Tamil Nadu (India).svg.png
23. சேலம் SA சேலம் 1 நவம்பர் 1956 ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று 5,205 34,82,056 669 India Tamil Nadu districts Salem.svg.png
24. சிவகங்கை SI சிவகங்கை 15 மார்ச் 1985 மதுரை மற்றும் இராமநாதபுரம் 4,086 13,39,101 328 India Tamil Nadu districts Sivaganga.svg.png
25. தென்காசி TS தென்காசி 22 நவம்பர் 2019 திருநெல்வேலி 2916.13 14,07,627 483 Tenkasi in Tamil Nadu (India).svg.png
26. தஞ்சாவூர் TJ தஞ்சாவூர் 1 நவம்பர் 1956 ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று 3,396.57 24,05,890 708 Thanjavur in Tamil Nadu (India).svg.png
27. தேனி TH தேனி 25 சூலை 1996 மதுரை 3,066 12,45,899 406 Theni in Tamil Nadu (India).svg.png
28. தூத்துக்குடி TK தூத்துக்குடி 20 அக்டோபர் 1986 திருநெல்வேலி 4,621 17,50,176 379 Thoothukudi in Tamil Nadu (India).svg.png
29. திருச்சிராப்பள்ளி TC திருச்சிராப்பள்ளி 1 நவம்பர் 1956 ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று 4,407 27,22,290 618 Tiruchirappalli in Tamil Nadu (India).svg.png
30. திருநெல்வேலி TI திருநெல்வேலி 1 நவம்பர் 1956 ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று 3842.37 16,65,253 433 Tirunelveli in Tamil Nadu (India).svg.png
31. திருப்பத்தூர் TU திருப்பத்தூர் 28 நவம்பர் 2019 வேலூர் 1,797.92 11,11,812 618 Tirupattur in Tamil Nadu (India).svg.png
32. திருப்பூர் TP திருப்பூர் 22 பிப்ரவரி 2009 கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு 5,186.34 24,79,052 478 India Tamil Nadu districts Tiruppur.svg.png
33. திருவள்ளூர் TL திருவள்ளூர் 1 சூலை 1997 செங்கல்பட்டு 3424 37,28,104 1,089 Tiruvallur in Tamil Nadu (India).svg.png
34. திருவண்ணாமலை TV திருவண்ணாமலை 30 செப்டம்பர் 1989 வட ஆற்காடு 6,191 24,64,875 398 Tiruvannamalai in Tamil Nadu (India).svg.png
35. திருவாரூர் TR திருவாரூர் 18 அக்டோபர் 1991 தஞ்சாவூர் 2,161 12,64,277 585 Tiruvarur in Tamil Nadu (India).svg.png
36. வேலூர் VE வேலூர் 30 செப்டம்பர் 1989 வட ஆற்காடு 2030.11 16,14,242 795 Vellore in Tamil Nadu (India).svg.png
37. விழுப்புரம் VL விழுப்புரம் 30 செப்டம்பர் 1993 தென் ஆற்காடு மாவட்டம் 3725.54 20,93,003 562 Viluppuram in Tamil Nadu (India).svg.png
38. விருதுநகர் VR விருதுநகர் 15 மார்ச் 1985 மதுரை மற்றும் இராமநாதபுரம் 4,288 19,42,288 453 Virudhunagar in Tamil Nadu (India).svg.png

முந்தைய மாவட்டங்கள்

வரைபடம் மாவட்டம் ஆண்டுகள் பின்னர் வந்த மாவட்டங்கள்
TN Districts Chengalpattu.png செங்கல்பட்டு 1956–1997 காஞ்சிபுரம், செங்கல்பட்டு(2019 முதல்) மற்றும் திருவள்ளூர்
TN Districts North Arcot.png வட ஆற்காடு 1956–1989 திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை(2019 முதல்) மற்றும் திருப்பத்தூர்(2019 முதல்)
TN Districts South Arcot.png தென் ஆற்காடு 1956–1993 கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி (2019 முதல்)

மாவட்டம் பிரிப்பு கோரிக்கைகள்

அதிகரிக்கும் மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டும் மற்றும் நிர்வாக வசதிகளுக்காகவும் புதிய மாவட்ட பிரிப்பு கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.

  • திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.[15]
  • வடக்கு சென்னை மக்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, சென்னையை இரண்டாகப் பிரித்து, வடசென்னையை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி வருகிறது.[19]
  • கடலூர் மாவட்டத்தை பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, முஷ்ணம் ஆகிய வருவாய் வட்டங்களுடன், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டங்களில் உள்ள சில வருவாய் கிராமங்களை பிரித்து புதிதாக நெய்வேலி வட்டத்தையும் உருவாக்கி விருத்தாசலம்மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.[சான்று தேவை]
  • சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.[சான்று தேவை]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. தமிழக மாவட்டங்கள் பிரிந்த வரலாறு!
  2. புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
  3. தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
  4. செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள் நியமனம்
  5. "தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு". இந்து தமிழ் (24 மார்ச், 2020)
  6. "கொரோனா பரபரப்புக்கு மத்தியில் பிறந்தது மயிலாடுதுறை புதிய மாவட்டம்.. முதல்வர் அறிவிப்பு!".ஒன்இந்தியா தமிழ் (24 மார்ச், 2020)
  7. "Census 2011". Government of India. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  8. "Districts of Tamil Nadu". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 24 January 2014.
  9. "Government of Tamil Nadu – Taluks". Information Technology Department, Government of Tamil Nadu. National Informatics Centre. Archived from the original on 3 October 2019. பார்க்கப்பட்ட நாள் 19 April 2020.
  10. "A – 2: Decadal Variation Population Since 1901" (PDF). தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். Archived (PDF) from the original on 13 November 2014. பார்க்கப்பட்ட நாள் 30 November 2019.
  11. "Coimbatore District Statistical Handbook". Coimbatore District Administration. Archived from the original on 4 December 2015. பார்க்கப்பட்ட நாள் 21 November 2015.
  12. "Erode District – District At a Glance". National Informatics Centre. Archived from the original on 11 September 2019. பார்க்கப்பட்ட நாள் 22 November 2019.
  13. "Minister visits villages to receive grievance applications". The Hindu. 31 August 2019. https://www.thehindu.com/news/national/tamil-nadu/minister-visits-villages-to-receive-grievance-applications/article29303360.ece. பார்த்த நாள்: 1 April 2020. 
  14. ஆரணி புதிய மாவட்டம் உருவாக்கப்படும் இபிஎஸ் அவர்கள் உறுதி
  15. பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்’முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி
  16. 16.0 16.1 "Increase in demands for new districts in Tamil Nadu". The New Indian Express. 19 August 2019. Archived from the original on 13 September 2019. பார்க்கப்பட்ட நாள் 1 April 2020.
  17. "CM will announce Kumbakonam district soon: Minister". The Times of India (in English). 29 November 2019. பார்க்கப்பட்ட நாள் 1 April 2020.
  18. பட்டுக்கோட்டை மாவட்டம் கோரிக்கை
  19. "Increase in demands for new districts in Tamil Nadu". The New Indian Express. Archived from the original on 25 September 2019. பார்க்கப்பட்ட நாள் 31 March 2020.
  20. பொன்னேரி தலைமையில் புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்
  21. "| மன்னார்குடி மாவட்டம் உருவாக்க கோரிக்கை". Archived from the original on 2020-07-14. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  22. It is possible to establish a district
  23. "தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: கோவில்பட்டி புதிய மாவட்டம் அறிவிக்கப்படுமா?". இந்து தமிழ்(12 ஆகத்து 2021)