கொடைக்கானல் வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கொடைக்கானல் வட்டம், தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக கொடைக்கானல் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 16 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

இந்த வட்டத்தின் கீழ் 16 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டத்தில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 30,771 வீடுகளும், 115,250 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் 57,884 ஆண்களும், 57,366 பெண்களும் இருந்தனர். மக்கள்தொகையில் 60.8% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 79.59% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் இருந்தனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 12,238 ஆக இருந்தது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 976 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 22,819 மற்றும் 3,602 ஆக இருந்தனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 77.75%, இசுலாமியர்கள் 4.67%, கிறித்தவர்கள் 17.36% & பிறர் 0.13% ஆவர்.

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2015-07-13.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2015-07-13.
"https://tamilar.wiki/index.php?title=கொடைக்கானல்_வட்டம்&oldid=127395" இருந்து மீள்விக்கப்பட்டது