கன்னிவாடி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கன்னிவாடி
கன்னிவாடி
இருப்பிடம்: கன்னிவாடி

,

அமைவிடம் 10°22′44″N 77°49′48″E / 10.379°N 77.830°E / 10.379; 77.830Coordinates: 10°22′44″N 77°49′48″E / 10.379°N 77.830°E / 10.379; 77.830
நாடு  இந்தியா
மாவட்டம் திண்டுக்கல்
வட்டம் திண்டுக்கல் மேற்கு
மக்களவைத் தொகுதி கன்னிவாடி
மக்கள் தொகை

அடர்த்தி

10,369 (2011)

586/km2 (1,518/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 17.70 சதுர கிலோமீட்டர்கள் (6.83 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/kannivadi-dindugal

கன்னிவாடி (ஆங்கிலம்:Kannivadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இப்பேரூராட்சி, 17.70 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 63 தெருக்களும் கொண்டது. இது ஆத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,746 வீடுகளும், 10,369 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 76.7% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,018 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 994 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,228 மற்றும் 14 ஆகவுள்ளனர்.[2]

வழிபாட்டுத்  தலங்கள்

அருகில் உள்ள மலைக்குகைக் கோவிலான சோமலிங்க சுவாமி கோவில். இந்த ஊரில் காணவேண்டிய முக்கியமான தலமாகும்.  கோபிநாத சுவாமி மலைக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இது கன்னிவாடிக்கு மிக அருகில் உள்ள முத்துரன்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. 

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=கன்னிவாடி&oldid=119738" இருந்து மீள்விக்கப்பட்டது