நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குழு உறுபினர்(Nilakottai Pachanyat Uninon), இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இந்த இவ்வூராட்சி ஒன்றியத்தில் இருபத்தி மூன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நிலக்கோட்டையில் இயங்குகிறது.


மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,24,478 ஆகும். அதில் ஆண்கள் 62,747; பெண்கள் 61,731 ஆக உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் தொகை 40,342 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 20,191; பெண்கள் 20,151 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 13 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 6; பெண்கள் 7 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சி மன்றங்கள்

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

  1. எத்திலோடு ஊராட்சி
  2. குள்ளக்குண்டு
  3. ஜம்புதுரைகோட்டை
  4. கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சி
  5. கூவனூத்து
  6. கோட்டூர்
  7. குள்ளிசெட்டிபட்டி
  8. மலையகவுண்டன்பட்டி
  9. மட்டபாறை
  10. முசுவனூத்தூ
  11. நக்கலூத்து
  12. நரியூத்து
  13. நூத்தூலாபுரம்
  14. பச்சமலையான்கோட்டை
  15. பள்ளபட்டி ஊராட்சி
  16. பிள்ளையார்நத்தம்
  17. ராமராஜபுரம்
  18. எஸ். மேட்டுபட்டி
  19. சிலுக்குவார்பட்டி ஊராட்சி
  20. சித்தர்கள்நத்தம்
  21. சிவஞானபுரம்
  22. வீலிநாயக்கன்பட்டி
  23. விளாம்பட்டி ஊராட்சி

இதனையும் காண்க

மேற்கோள்கள்