சித்தையன்கோட்டை
சித்தையன்கோட்டை (ஆங்கிலம்:Sithayankottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இப்பேரூராட்சியானது 4 வருவாய் கிராமங்களைக் கொண்ட பேருராட்சியாகும். சித்தையன்கோட்டை பேருராட்சி ஜம்மு காஷ்மீர் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை NH 45 வழித்தடத்திலும் திண்டுக்கல்- தாண்டிக்குடி வழித்தடத்தில் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 13,619 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 17.25 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 42 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது ஆத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,522 வீடுகளும், 13,634 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 77.2% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 974 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 974 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,723 மற்றும் 0 ஆகவுள்ளனர்.[1]
ஆதாரங்கள்
- ↑ [Sithayankottai Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011]