குன்னுவாரங்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில்
குன்னுவாரன்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°06′24″N 77°46′46″E / 10.106750°N 77.779306°ECoordinates: 10°06′24″N 77°46′46″E / 10.106750°N 77.779306°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திண்டுக்கல் |
அமைவிடம்: | குன்னுவாரன்கோட்டை |
சட்டமன்றத் தொகுதி: | நிலக்கோட்டை |
மக்களவைத் தொகுதி: | திண்டுக்கல் |
ஏற்றம்: | 232.81 m (764 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | காசி விசுவநாதர் |
தாயார்: | காசி விசாலாட்சி |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
குன்னுவாரன்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், குன்னுவாரன் கோட்டை எனும் ஊரில் வத்தலக்குண்டிலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும் .
குன்னுவாரன்கோட்டை
முந்தைய காலத்தில் குன்று - அரண் - கோட்டை என்றழைக்கப்பட்டு, குன்றுவாரங்கோட்டையாக மருவி அழைக்கப்பட்டு வந்தது. தற்போது குன்றுவாரங்கோட்டை என்பதும் மருவி குன்னுவாரன்கோட்டை என்றாகி விட்டது. கண்ணாப்பட்டி என்றும் வட்டார வழக்கில் அழைக்கப்படுகிறது. இங்கு மஞ்சளாறு, வைகை மற்றும் மருதா நதிகள் கூடுகின்றன. எனவே இதை முக்கூட்டுத்துறை என்றும் அழைப்பதுமுண்டு.[1][2] இங்கு 1941ம் ஆண்டில் ஆங்கிலோயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கண்ணகி பாலம் உள்ளது.
காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில்
சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் இந்த ஊரில் உள்ள ஒரு சிவபக்தர் காசிக்கு பாதயாத்திரையாகச் சென்று காசி விசாலாட்சி விசுவநாதர் மற்றும் அன்னபூரணி அம்மனைத் தரிசித்தார். அங்கிருந்து திரும்பும் பொழுது ஒரு சிவலிங்கத்தை தலைச்சுமையாக எடுத்து வந்தார். அந்த சிவலிங்கத்தை இந்த ஊரில் பிரதிஷ்டை செய்து ஒரு கோயில் அமைத்தார் என்று இக்கோயிலுக்கான தல புராணம் கூறுகிறது[1]. இக்கோயிலில் விசாலாட்சி தெற்கு நோக்கியும், விசுவநாதர் கிழக்கு நோக்கியும் காசியில் உள்ளதுபோல காணப்படுகின்றனர். இங்கு வைகை வடக்கு நோக்கி (வடவாஹினீ , உத்தரவாஹினீ) செல்வது கங்கை காசிக்கு அருகில் வடக்கு நோக்கி செல்வது போல் இருக்கின்றது. தை மற்றும் ஆடி அமாவாசை ஆகிய விசேட நாட்களில் இச்சங்கமத்தில் நீராடினால் பிறவிப்பயன் கிட்டும் என்று ஊர் மக்களால் நம்பப்படுகிறது. இங்கு வைகை வேகவதி என்றும் அழைக்கபடுகிறாள்[3]. இங்கு ஸ்ரீ பைரவர், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. இங்கு மஹாளய அமாவாசை முதலான நாட்களில் பக்தர்கள் முன்னோர்கள் ஆராதனை செய்து சிவ வழிபாடு செய்கின்றனர்[4].
சிறப்பு
- சிருங்கேரி மடத்தின் 25வது பீடாதிபதி ஜகத்குரு சச்சிதானந்த பாரதீ I (1623-1663) மகா சுவாமிகள் இத்தலத்தில் பிறந்தவர்.[5]. இங்கு அவரது ஜயந்தி விழா ஆவணி மாதம் தேய் பிறை ரோகிணி நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது[6]. சிருங்கேரி சாரதா பீடத்தின் 35வது பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் இத்தலத்திற்கு 1965ல் விஜயம் செய்துள்ளார். சிருங்கேரி சாரதா பீடத்தின் தற்போதைய பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் இத்தலத்திற்கு இரண்டு முறை விஜயம் செய்துள்ளார். [7]. ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் 2017 ஏப்ரல் மாதத்தில் இத்தலத்திற்கு விஜயம் செய்துள்ளார்.[8].
ஆதாரங்கள்
- ↑ 1.0 1.1 கே. வெங்கடேஸ்வரன், மதுரை (மார்ச் 1-15 2010, பக். 38, 39, 40, 41) குன்றுவாரங்கோட்டை உலக நாயகன், குமுதம் பக்தி ஸ்பெஷல்
- ↑ Sthani, Dindigul (January 15, 2016). "- Kunnuvarankottaiyil 13th Century Tollgate" தமிழ்: குன்னுவராயன் கோட்டையில் 13ம் நூற்றாண்டு 'டோல்கேட , 'Dinamalar' {{lang-ta |;தினமலர்', Tamil periodical
- ↑ பண்டித திரு. ரெ. ராமமூர்த்தி, வித்துவான் ரா. அரங்க கிருஷ்ணன், (பிப்ரவரி 2010, பக். 11) ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சர் அருளிய இன்கதை கவிதை, சரவணா பதிப்பகம், சின்மயா நகர், சென்னை-92
- ↑ உ. சிவராமன். (18 பிப்ரவரி 2014, பக். 44,45) ஸ்ரீ விஸ்வனாதர் கோயில்! மாசி மக நன்னாளில் பால் பாயச நைவேத்தியம்!, சக்தி விகடன் ஸ்பெஷல், தமிழ் பத்திரிகை.
- ↑ கே. நாராயணஸ்வாமி, வித்யாரண்யபுரம், (சிருங்கேரி) (அக் 2009. பக். 074,075,076,077,078,079). சிருங்கேரியில் ஒளிர்ந்த மதுரை மஹாரத்னம்!, அம்மன் தரிசனம், தீபாவளி சிறப்பிதழ், தமிழ் பத்திரிகை.
- ↑ R. வெங்கட்ட ரமணி, (ஆக 2003. பக். 8,9,10,11,12,13). சிருங்கேரி சாரதா பீடத்தின் 25வது பீடாதிபதி முதலாம் ஸச்சிதானந்த பாரதி, 'அம்மன் தரிசனம்', தமிழ் பத்திரிகை
- ↑ http://vijayayatra.sringeri.net/vathalagundu-june-1-2012/ பரணிடப்பட்டது 2013-05-06 at the வந்தவழி இயந்திரம் - Visit to Kunnuvarankottai and Vathalagundu on June 1, 2 2012 of the current pontiff which contains the photographs also.
- ↑ "Vathalagundu – April 20,21 2017 Jagadgurus at Vathalagundu". Archived from the original on 2018-05-31. பார்க்கப்பட்ட நாள் 2018-04-29.
வெளி இணைப்புகள்
- ரா. கோபலய்யர் (26-1-2001), குன்னுவாரன்கோட்டை விசாலாட்சி விச்வேசுவரர் திருச்சதகம், கஸ்தூரி அச்சகம், திருமங்கலம்
- (29-8-2010, P.7). குன்னுவாரங்கோட்டையில் சச்சிதாநந்த பாரதீ ஜயந்தி, தினமலர் செய்தி நாள் இதழ், திண்டுக்கல், Tamil Daily newspaper, Madurai and Dindigul Editions.
- (13-10-2013). "ஸ்ரீ விசுவநாதர் கோயில் ", தினமலர் செய்தி நாள் இதழ், - http://temple.dinamalar.com/en/new_en.php?id=1145 -Website covering the features of this temple on the Vijayadasami day.
- (15-01-2016). "Kunnuvarankottaiyil 13th Century Tollgate", Dinamalar Tamil daily newspaper, http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=28648&ncat=12.