ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியம் (REDDIARCHATTIRAM PANCHAYAT UNION), இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியத்தில் இருபத்தி நான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ரெட்டியார்சத்திரத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,682 ஆகும். அதில் ஆண்கள் 51,458; பெண்கள் 51,224 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 19,307 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 9,627; பெண்கள் 9,680 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 252 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 127; பெண்கள் 125 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சி மன்றங்கள்

ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்:[3]

  1. ஆடலூர்
  2. அழகுபட்டி
  3. அம்மாப்பட்டி
  4. அனுமந்தராயன்கோட்டை
  5. தர்மத்துப்பட்டி
  6. என்.ஜி. நடுப்பட்டி
  7. குருந்தநாயக்கன்பட்டி
  8. கே. புதுக்கோட்டை
  9. காமாட்சிபுரம்
  10. கரிசல்பட்டி
  11. கசவனம்பட்டி
  12. கோனூர்
  13. கொத்தப்புள்ளி
  14. குட்டத்துப்பட்டி
  15. மாங்கரை
  16. முருநெல்லிக்கோட்டை
  17. நீலாமலைக்கோட்டை
  18. பலக்கானூத்து
  19. பண்ணைப்பட்டி
  20. பன்றிமலை
  21. பொன்னிமாந்துறை
  22. புதுச்சத்திரம்
  23. புதுப்பட்டி
  24. சில்வார்பட்டி

இதனையும் காண்க

மேற்கோள்கள்