ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் (ATHOOR PANCHAYAT UNION) , தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 22 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. ஆத்தூர் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆத்தூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,07,752 ஆகும். அதில் ஆண்கள் 53,507; பெண்கள் 54,245 ஆக உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் தொகை 26,602 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 13,205; பெண்கள் 13,397 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 105 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 48; பெண்கள் 57 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சி மன்றங்கள்

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் 22 கிராம ஊராட்சிகளைக் கொண்டது. [3]அவைகள்:வீரக்கல் • வக்கம்பட்டி • தொப்பம்பட்டி • சித்தரேவு • பித்தளைப்பட்டி • பிள்ளையார்நத்தம் • பாறைப்பட்டி • பாளையங்கோட்டை • என். பஞ்சம்பட்டி • முன்னிலைக்கோட்டை • மணலூர் • கலிக்கம்பட்டி • சீவல்சரகு • காந்திகிராமம் • தேவரப்பன்பட்டி • செட்டியபட்டி • போடிக்காமன்வாடி • அய்யன்கோட்டை • ஆத்தூர் • அம்பாத்துரை • ஆலமரத்துப்பட்டி • அக்கரைபட்டி

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்