ஈரோடு வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஈரோடு வட்டம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1]இந்த வட்டத்தின் தலைமையகமாக ஈரோடு மாநகரம் உள்ளது.

2016ம் ஆண்டு வரை 94 வருவாய் கிராமங்களை கொண்டிருந்த ஈரோடு வட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு மொடக்குறிச்சி வட்டம், கொடுமுடி வட்டம் நிறுவப்பட்டது. தற்போது இந்த வட்டத்தின் கீழ், ஈரோடு மேற்கு, ஈரோடு வடக்கு, ஈரோடு கிழக்கு என 3 உளவட்டங்களும், 46 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2] இதிலுள்ள பெரும்பாலான பகுதிகள் தற்போதைய ஈரோடு மாநகராட்சி எல்லையின் கீழ் வருகின்றன.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒருங்கிணைந்த பழைய ஈரோடு வட்டம் 8,22,329 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில், 411,124 ஆண்களும், 411,205 பெண்களும் உள்ளனர். 237,593 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில், 22.5% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 80.22% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,000 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 73,654 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 955 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 122,375 மற்றும் 812 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.98% , இசுலாமியர்கள் 5.89%, கிறித்தவர்கள் 2.91% மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஈரோடு_வட்டம்&oldid=40189" இருந்து மீள்விக்கப்பட்டது