ஊத்தங்கரை வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஊத்தங்கரை வட்டம் , தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக ஊத்தங்கரை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 185 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1] இவ்வட்டத்தில் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

அமைவிடம்

ஊத்தங்கரை வட்டமானது மேற்கில் இதே மாவட்டத்தின் போச்சம்பள்ளி வட்டம், தருமபுரி மாவட்டத்தின் ஒரு பகுதியையும், வட பகுதி ஆந்திர மாநிலத்தையும், கிழக்கில் திருப்பத்தூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் ஆகியவற்றையும், தெற்கில் தருமபுரி மாவட்டத்தின் அரூர் வட்டத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 213,291 ஆகும். அதில் 109,684 ஆண்களும், 103,607 பெண்களும் உள்ளனர். 52,743 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 91.3% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 71.44% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 945 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 23376 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 892 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 47,585 மற்றும் 2,650 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 94.99%, இசுலாமியர்கள்4.36% , கிறித்தவர்கள் 0.56% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஊத்தங்கரை_வட்டம்&oldid=127794" இருந்து மீள்விக்கப்பட்டது