காரைக்குடி வட்டம்
காரைக்குடி வட்டம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக காரைக்குடி நகரம் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் காரைக்குடி, கல்லல், மித்திரவயல், பள்ளத்தூர், சாக்கோட்டை என ஐந்து உள்வட்டங்களும், 64 வருவாய் கிராமங்களும் உள்ளன.[1]
காரைக்குடி வட்டத்தில் கல்லல் ஊராட்சி ஒன்றியம் மற்றும் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 300,527 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 149,443 ஆண்களும், 151,084 பெண்களும் உள்ளனர். 76,868 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 39.5% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 84.59% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,011 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 30304 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 960 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 35,980 மற்றும் 186 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 89.01%, இசுலாமியர்கள் 6.01%, கிறித்தவர்கள் 4.68% & பிறர் 0.29% ஆகவுள்ளனர். [2]