பேரணாம்பட்டு வட்டம்
Jump to navigation
Jump to search
பேரணாம்பட்டு வட்டம், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தின் வேலூர் வருவாய் கோட்டத்தில் அமைந்த ஐந்து வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] மேலும் வேலூர் மாவட்டத்தின் 13 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இதன் வட்டாட்சியர் அலுவலகம் பேரணாம்பட்டு ஊரில் இயங்குகிறது. பேரணாம்பட்டு வட்டத்தில் பேரணாம்பட்டு, மேப்பட்டி மற்றும் வாலாத்தூர் என மூன்று குறு வட்டங்களையும், 52 வருவாய் கிராமங்களையும் கொண்டது. [2] [3]
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.
அருகில் உள்ள நகரங்கள்
- வேலூர் - 45 கிமீ
- குடியாத்தம் - 18 கிமீ
- பள்ளிகொண்டா - 28 கிமீ
- ஆம்பூர் - 19 கிமீ
- சென்னை - 190 கிமீ