பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு | |||||||
அமைவிடம் | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | வேலூர் | ||||||
வட்டம் | வேலூர் வட்டம் | ||||||
ஆளுநர் | [1] | ||||||
முதலமைச்சர் | [2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | வி. ஆர். சுப்புலட்சுமி, இ. ஆ. ப [3] | ||||||
நகராட்சி தலைவர் | |||||||
மக்கள் தொகை | 51,271 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
பேரணாம்பட்டு (ஆங்கிலம்:Pernampattu) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் உள்ளது பேர்ணாம்பட்டு நகராட்சி. பேரணாம்பட்டு வட்டாட்சியும் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். பேரணாம்பட்டு நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அமைவிடம்
இது ஆந்திரா - தமிழ்நாடு எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. இவ்வழியே தேசிய நெடுஞ்சாலை 234 அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51,271 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 25,285 ஆண்கள், 25,986 பெண்கள் ஆவார்கள். பேரணாம்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 79.59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85.35%, பெண்களின் கல்வியறிவு 74.03% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09 % விட கூடியதே. பேரணாம்பட்டு மக்கள் தொகையில் 13.39% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இவர்களில் இந்துக்கள் 36.44%, முஸ்லிம்கள் 61.56%, கிறித்தவர்கள் 1.72% ஆவார்கள். [4]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பேரணாம்பட்டு நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்