உடுமலைப்பேட்டை வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உடுமலைப்பேட்டை
—  வட்டம்  —
உடுமலைப்பேட்டை
அமைவிடம்: உடுமலைப்பேட்டை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°35′N 77°14′E / 10.58°N 77.24°E / 10.58; 77.24Coordinates: 10°35′N 77°14′E / 10.58°N 77.24°E / 10.58; 77.24
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் உடுமலைப்பேட்டை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 118,141 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் http://123.63.242.116/udumalaipet/abtus_municipality.htm


உடுமலைப்பேட்டை வட்டம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். [4] இந்த வட்டத்தின் தலைமையகமாக உடுமலைப்பேட்டை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 5 உள்வட்டங்களும், 75 வருவாய் கிராமங்களும் உள்ளது. [5]

இவ்வட்டத்தில் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 237,861 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 118,141 ஆண்களும், 119,720 பெண்களும் உள்ளனர். 68,008 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 55.6% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 78.94% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 18873 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 953 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 48,097 மற்றும் 2,227 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.25%, இசுலாமியர்கள் 5.49%, கிறித்தவர்கள் 2.05% மற்றும் பிறர் 0.22% ஆகவுள்ளனர்.[6]

சுற்றுலா தலங்கள்

  1. திருமூர்த்தி மலை
  2. திருமூர்த்தி அணை
  3. திருமூர்த்தி அருவி
  4. அமராவதி அணை
  5. அமராவதி முதலைப் பண்ணை [7]
  6. மறையாறு
  7. [[சின்னாறு]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. திருப்பூர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
  5. உடுமலைப்பேட்டை வருவாய் கிராமங்கள்
  6. உடுமலைப்பேட்டை வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்
  7. Amaravathi Crocodile Farm
"https://tamilar.wiki/index.php?title=உடுமலைப்பேட்டை_வட்டம்&oldid=91844" இருந்து மீள்விக்கப்பட்டது