மடத்துக்குளம்
மடத்துக்குளம் பேரூராட்சி | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பூர் |
வட்டம் | மடத்துக்குளம் வட்டம் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | தா. கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3] |
சட்டமன்றத் தொகுதி | மடத்துக்குளம்
- |
சட்டமன்ற உறுப்பினர் |
சி. மகேந்திரன் (அதிமுக) |
மக்கள் தொகை • அடர்த்தி |
20,620 (2011[update]) • 2,175/km2 (5,633/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 9.48 சதுர கிலோமீட்டர்கள் (3.66 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/madathukulam |
மடத்துக்குளம் (ஆங்கிலம்:Madathukulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்திலுள்ள, மடத்துக்குளம் வட்டம் மற்றும் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். மடத்துக்குளம் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
மடத்துக்குளம் வட்டம், 01.01.2010 அன்று, உடுமலைப்பேட்டை வட்டத்தின், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளைக் கொண்டு புதிய வருவாய் வட்டமாக பிரிக்கப்பட்டது இங்கு முக்கியமான தொழிலாக விவசாயம் உள்ளது. இது அமராவதி ஆறு மூலம் பாசனம் நடைபெறும் பகுதி ஆகும். இந்த அமராவதி ஆறு அமராவதி அணைக்கட்டிலிருந்து உருவாகி மடத்துக்குளம், சோழமாதேவி, கணியூர், காரத்தொழுவு மற்றும் கடத்தூர் வழியாக தாராபுரம் செல்கிறது.
அமைவிடம்
மடத்துக்குளம்பேரூராட்சியிலிருந்து, திருப்பூர் 74 கிமீ; உடுமலைப்பேட்டை 13 கிமீ; பழநி 26; கொமாரலிங்கம் 7 கிமீ; தாராபுரம் 31கிமீ; கணியூர் 7 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
9.48 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 100 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,761 வீடுகளும், 20,620 மக்கள்தொகையும் கொண்டது.[5]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ மடத்துக்குளம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Madathukulam Population Census 2011